டீக்கடை பஜ்ஜி என்றாலே பலருக்கும் தனிப் பிரியம் தான். புசு புசுவென எண்ணெய் குடிக்காத டீக்கடை சுவையில் இருக்கும் பஜ்ஜியை எளிமையாக வீட்டிலேயே செய்து விடலாம்

bajji
- Advertisement -

வீட்டில் பலவிதமான தின்பண்டங்கள் செய்து கொடுத்தாலும் விருப்பப்படும் நேரத்தில் எல்லாம் சாப்பிடுவதற்கு டீக்கடையில் செய்யக்கூடிய வெங்காய போண்டா, உளுந்து வடை, கடலைப் பருப்பு வடை, பஜ்ஜி போன்றவற்றை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் ஒரு சிலருக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும். கடையில் விற்க்கும் பஜ்ஜி, வடை மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக மொரு மொருவென இருக்கிறதென்று. இதில் பெரிய ரகசியம் என்று எதுவும் இல்லை. கடலை மாவு மற்றும் அரிசி மாவின் அளவை சரியான பதத்தில் சேர்த்தாலே போதும். கடையில் விற்கும் அதே சுவையில் வீட்டிலேயும் இந்த பஜ்ஜியை சுவையாக செய்துவிடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

vadai

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2, கடலை மாவு – 2 கப், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், சீரக தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கேசரி பவுடர் – கால் ஸ்பூன், சோடா உப்பு – கால் ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு வாழைக்காயை அதன் தண்டுகளை நறுக்கிக் கொண்டு, மேல் உள்ள தோலை லேசாக சீவி கொள்ள வேண்டும். பின்னர் காய் சீவலை பயன்படுத்தி வாழைக்காயை மெல்லிய துண்டுகளாக சீவிக் கொள்ள வேண்டும்.

valaikai

ஒரு அகன்ற பாத்திரத்தில் 2 கப் கடலை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பெருங்காய தூள், அரை ஸ்பூன் சீரக தூள், ஒரு ஸ்பூன் தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இறுதியாக கால் ஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சீவி வைத்துள்ள வாழைக்காய் துண்டை ஒவ்வொன்றாக எடுத்து இந்த பஜ்ஜி மாவில் முழுவதுமாக தோய்த்து, எண்ணெயில் போட வேண்டும்.

valakkai-bajji

ஒரே முறையில் 2, 3 வாழைக்காய் பஜ்ஜிகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம். எண்ணையில் போட்ட பஜ்ஜி நன்றாக உப்பி சிவந்து வந்ததும் வெளியே எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் வெங்காய சட்னி அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். இதன் சுவை கடையில் வாங்கும் அதே பஜ்ஜியின் சுவையில் மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -