டீ கடை நெய் பிஸ்கட் இப்படி செய்து பாருங்கள். டீ கடையில் உள்ளது போல் சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.

tea kadai biscut
- Advertisement -

டீ கடை பக்கம் போகும்போதெல்லாம் ஆண்கள் பலரது கையும் தானாகவே அங்கே பாட்டிலில் இருக்கும் பிஸ்கட்டை நோக்கி செல்லும். அந்த அளவிற்கு அந்த பிஸ்கட்டின் சுவை நமது மனதில் நிலைத்திருக்கும். அத்தகைய ஒரு சூப்பரான டீ கடை பிஸ்கட்டை நமது வீட்டிலேயே வெறும் 4 பொருட்களை கொண்டே எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் – 4
நெய் – 100 கிராம்
கோதுமை மாவு – 150 கிராம்

- Advertisement -

செய்முறை:
சர்க்கரையை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதோடு ஏலக்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். பிறகு ஒரு பௌலில் நெய்யை ஊற்றி அதை நன்கு கிளறிவிட வேண்டும். பிறகு அதோடு நாம் ஏற்கனவே பொடி செய்துவித்துள்ள சர்க்கரையை சேர்த்து அதோடு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இந்த கலவை முழுவதுமாக ஒன்றோடொன்று சேரும் வகையில் 5 நிமிடமாவது கிளறிவிட வேண்டும். இதில் சால்ட் பிஸ்கட் வேண்டும் என்று நினைப்பவர்கள் உப்பை கொஞ்சம் தூக்கலாக சேர்த்துக்கொள்ளலாம். அதே போல நெய் இல்லை என்றால் வெண்ணை அல்லது ரீபைண்ட் எண்ணெய் கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக கோதுமை மாவினை இந்த கலவையோடு சேர்த்து பிசைய வேண்டும். அதிகம் பிசையாமல் அனைத்தும் கலக்கும் அளவிற்கு பிசைந்தால் போதுமானது. இந்த கலவை அதிகம் கெட்டியாக அளவிற்கு நல்ல ஒரு பதத்தில் இதை பிசைய வேண்டும். ஒருவேளை இந்த கலவை மிகவும் இறுக்கமாக இருப்பது போல உங்களுக்கு தோன்றினால் மிக மிக குறைவான அளவில் இதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக இந்த மாவில் இருந்து 15 முதல் 20 உருண்டைகள் வரும் அளவிற்கு சிறிது சிறிதாக உருண்டை பிடித்து அந்த உருண்டையை மெதுவாக கை விரைகளை கொண்டு வட்ட வடிவில் செய்யவேண்டும்.

அடுத்ததாக, ஓரளவிற்கு கடினமான ஒரு பிளேட்டை எடுத்துக்கொண்டு அதில் நெய் தடவி, நாம் ஏற்கனவே தட்டி வைத்துள்ள வட்டவடிவிலான பிஸ்கட்டை தனி தனியாக வைக்க வேண்டும். பிறகு ஒரு கனமான நான்ஸ்டிக் பேன் அல்லது கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கடாய்க்குள் பாத்திரம் வைக்கும் ஸ்டாண்டை வைத்து, லோ பிலேமில் சூடாக்க வேண்டும். பிறகு பிஸ்கட் உள்ள பிளேட்டை எடுத்து நான்ஸ்டிக் பேனில் உள்ள ஸ்டாண்ட் மீது வைத்து மூடி போட்டு மூடிவிட வேண்டும்.

இப்படி லோ பிலேமில் 20 முதல் 25 நிமிடம் வரை இருக்க வேண்டும். அதன் பிறகு பிளேட்டை வெளியில் எடுத்து, பிளேட் ஆறியதும் அதில் இருந்து பிஸ்கட்டை எடுத்து தனியாக வைத்து ஆறவிட வேண்டும். வெளியில் எடுக்கும் சமயத்தில் பிஸ்கட் சற்று சாப்டாக(soft) இருப்பது போல் இருந்தாலும் ஆறி சிறிது நேரத்திற்கு பிறகு இது முறுமொறுவென்று ஆகி விடும். அவ்வளவு தான் சுவையான டீ கடை பிஸ்கட் தயார்.

நெய் சேர்த்து இதை செய்தால் ஒரு மதம் வரை இதை ஏர் டைட் டப்பாவில் வைத்து சாப்பிடலாம். எண்ணெய் சேர்த்து இதை செய்தால் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதன் பிறகு இதில் எண்ணெய் வாடை வர துவங்கும்.

- Advertisement -