டீக்கடை வெங்காய வடைய , நல்ல ஒரு ஹோட்டல் ரிச் லுக்கில் எப்படி செய்றதுன்னு பாக்கலாமா? அப்புறம் பாருங்க இது வீட்ல செய்த வடைன்னு சொன்ன நம்பவே மாட்டாங்க. அவ்வளவு சூப்பரா இருக்கும்.

- Advertisement -

நமக்கெல்லாம் வீட்டில் என்ன தான் ஸ்னாக்ஸ் செய்தாலும்,மாலை நேரத்தில் இந்த டீக்கடையில் போடும் போண்டா, பஜ்ஜி, போன்றவைகளில் மீது எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் ஒரு டீக்கடை ரெசிபியான வெங்காய வடையை தான் இப்பொழுது எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். டீக்கடைகளில் மட்டுமில்லை போதெல்லாம் பெரிய பெரிய கடைகளில் ஹோட்டல்களில் எல்லாம் கூட இந்த வெங்காய வடை ஃபேமஸாக இருக்கிறது அதை எப்படி நாம் வீட்டில் சுலபமாக செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வெங்காய வடைக்கு தேவையான பொருட்கள்: வெங்காயம் – 4, பச்சை மிளகாய் – 4, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு -10, கடலை மாவு 3 1/2 டீஸ்பூன், அரிசி மாவு -1 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி -1 கைப்பிடி, காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், எண்ணெய் -250 கிராம்.

- Advertisement -

இந்த இந்த வெங்காய வடை செய்வதற்கு வெங்காயம் நறுக்கும் முறை மிகவும் முக்கியம். பிரியாணிக்கு நறுக்குவதைப் போல வெங்காயத்தை நீளவாக்கில் அதே சமயத்தில் நல்ல மெல்லிசாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவைகளையும் நல்ல பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி மட்டும் இடி உரலில் போட்டு நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் பிசையும் போது இஞ்சின் சாறு எல்லா பக்கமும் சேரும். அதற்காக இஞ்சி பேஸ்ட் சேர்த்து விடாதீர்கள் வடையின் சுவை மாறிவிடும்.

இப்பொழுது அரிந்த வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இஞ்சி அனைத்தையும் சேர்த்த பிறகு அதில் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். உப்பு சேர்த்த உடனே மசாலாக்களை போட்டு விட வேண்டும். ஏனென்றால் உப்பு போட்டவுடன் வெங்காயத்தில் இருந்து நீர் விட ஆரம்பிக்கும். பிறகு மாவை சரியான பக்குவத்திற்கு பிசைய முடியாது.

- Advertisement -

இப்பொழுது அந்த வெங்காயத்துடன் உப்பு சேர்த்த பிறகு மிளகாய் தூள், கடலை மாவு மூணு ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன், மீதம் இருக்கும் அரை ஸ்பூன் மாவு அப்படியே இருக்கட்டும். இந்த மாவு பிசைந்த பிறகு கடைசியாக அதை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சேர்த்த மாவை நன்றாக பிசைந்து உருட்டி கையில் வைத்து தட்டும் போது உங்களுக்கு வெங்காயம் பிரிந்து வராமல் வெங்காயத்தின் மேல் மாவு ஒட்டி இருக்க வேண்டும். அதே சமயம் இந்த மாவை உருண்டை பிடிக்கவும் வர வேண்டும். அப்படி இருந்தால் மீதமிருக்கும் அந்த அரை ஸ்பூன் மாவை சேர்க்க வேண்டாம் இல்லையென்றால் மீதம் இருக்கும் மாவைசேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

எந்த காரணத்திற்காகவும் தண்ணீர் கொஞ்சம் கூட சேர்த்து விடாதீர்கள். இவையெல்லாம் வெங்காய வடை நல்ல பெர்ஃபெக்ட் ஹோட்டல் ஸ்டைல் வருவதற்கான சின்ன சின்ன குறிப்புகள்.அவ்வளவு தான் மாவு பிசைந்து முடிந்தாயிற்று.

இதையும் படிக்கலாமே:: உங்களுக்கு மட்டும் இந்த பூரி உப்பலாவே வரமாட்டேங்குதா? காலையில் சுட்ட பூரி இரவு வரைக்கும் கூட அப்படியே இருக்க, இந்த சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டா போதும்.அப்புறம் பூரி சுடுவதில் நீங்க தான் மாஸ்டர்.

இனி நீங்கள் அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் காய வைத்தவுடன் மாவை தட்டி போட்டு வெங்காயம் வடை பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் இந்த முறையில் நீங்கள் சரியாக செய்தால் நல்ல ஒரு டீக்கடை ஸ்டைலில் அதேபோல் ஒரு ஹோட்டல் ரிச் லுக்கில் உங்களோட வடை அட்டகாசமான சுவையில் இருக்கும் நீங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -