நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசய கோவில் குளம் – வியக்கும் விஞ்ஞானிகள்

temple-1

இந்திய கோவில்களில் நடக்கும் சில அதிசய நிகழ்விற்கு விஞ்ஞானத்தால் இதுவரை பதில் கூற முடியவில்லை என்பதே உண்மை அந்த வகையில் அவ்வவ்போது வெவ்வேறு நிறங்களில் மாறும் ஒரு அதிசய கோவில் குளத்தை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

Kheer_Bhawani temple

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 14 மைல் தொலைவில் அமைந்துள்ளது கீர் பவானி கோவில். இந்த கோவிலில் பவானி அம்மன் சிவனோடு வீற்றிருக்கிறார்.

இந்த கோவிலில் உள்ள குளத்தின் நீரில் பக்தர்கள் அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த குளத்தில் இருக்கும் நீரானது பச்சை, இளஞ்சிவப்பு என பல்வேறு நிறங்களில் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது. எந்த நிறத்தில் நீர் மாறினாலும் பிரச்சனை இல்லை ஆனால் குளத்தின் நீர் கருப்பு நிறத்தில் மட்டும் மாறவே கூடாது என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.

Kheer_Bhawani temple

 

குலத்தின் நீர் கருப்பு நிறத்தில் மாறினால் அது அழிவிற்கான அறிகுறியாம். ஆகையால் நீர் குறுப்பு நிறத்தில் மாறும் அறிகுறி தெரிந்தாலே சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுமாம். எவ்வளவு பெரிய ஆபத்தையும் முன்கூட்டியே உணர்த்தும் ஒரு அதிசய குளமாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனாலும் மக்களின் சில அலட்சியத்தால் சில அசம்பாவிதங்களும் நேரத்தான் செய்கிறது.

black

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த குலத்தின் நீர் கருப்பு நிறத்தில் மாறியபோது இந்த பகுதியில் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 200 பேர் இறந்துபோனார்களாம். அதோடு 40,000 பேர் அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்களாம். இது போல பல நேரங்களில் இந்த கோவில் குளம் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்தியுள்ளதாம். இந்த கோவிலின் பெருமை அறிந்த சுவாமி விவேகாநதர், இங்கு வந்து வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.