2018ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எந்த கோயிலிற்கு சென்று வழிபட்டால் அதிஷ்டம் பெருகும்

astrology

2018 ஆம் ஆண்டை பொறுத்தவரை சில ராசிக்காரர்களுக்கு அமோகமான ஆண்டாக இருக்கும் ஆனால் சில ராசிக்காரர்களுக்கு சிறிது மந்தமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் ராசிப்படி நீங்கள் எந்த கோயிலிற்கு சென்று வழிபட்டால் கெடுபலன்கள் அனைத்து விலகி ஒரு மிக சிறந்த ஆண்டாக இது உங்களுக்கு அமையும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamமேஷ ராசிக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் இரும்பை என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு குயில்மொழி நாயகி சமேத அருள்மிகு மகா காளேஸ்வரரை பிரதோஷ நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

ரிஷபம்:
rishabamரிஷப ராசிக்காரர்கள் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு காட்டழகிய சிங்கர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாட்டழகிய சிங்கப் பெருமாளை (லட்சுமி நரசிம்மரை) சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்:
midhunamமிதுன ராசிக்காரர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவரை தேய்பிறை அஷ்டமி திதி நாளில் சென்று வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.

கடகம்:
kadagamகடக ராசிக்காரர்கள் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஈச்சனாரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானை சதுர்த்தி திதியில் சென்று வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்கள் காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மனை தசமி திதி நாளில் சென்று வணங்குவதால் கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

கன்னி:
kanniகன்னி ராசிக்காரர்கள் திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளையும், கருடாழ்வாரையும் ஏகாதசி நாளில் துளிசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

துலாம்:
thulamதுலாம் ராசிக்காரர்கள் கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாமனபுரீஸ்வரரையும், ஸ்ரீஅம்புஜாட்சி அம்மையாரையும் சதுர்த்தசி திதியன்று சென்று வணங்குங்கள்.

விருச்சிகம்:
virichigamவிருச்சிக ராசிக்காரர்கள் திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் ஸ்ரீவெக்காளி அம்மனை வெள்ளிக் கிழமையில் சென்று வணங்கி வாருங்கள்.

தனுசு:
dhanusuதனுசு ராசிக்காரர்கள் திருநெல்வேலி – தூத்துக்குடி சாலையில் உள்ள முறப்பநாடு என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாச நாதர், சிவகாமி அம்மையையும், ஸ்ரீவீர பைரவரையும் அஷ்டமி நாளில் சென்று வணங்குங்கள்.

மகரம்:
magaramமகர ராசிக்காரர்கள் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

கும்பம்:
kumbamகும்ப ராசிக்காரர்கள் திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாசுதேவப் பெருமாளையும், ஸ்ரீசெங்கமலத் தாயாரையும் சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

மீனம்:
meenamமீன ராசிக்காரர்கள் திருவண்ணாமலை மாவட்டம், எறும்பூர் என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீபட்சீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.