விபத்துகளில் இருந்து காப்பாற்றும் அற்புத கோயில் பற்றி தெரியுமா ?

amman-4
- Advertisement -

விபத்துகளும், உயிர்ப்பலிகளும் பல குடும்பங்களை நிலைகுலையவைத்துவரும் வேளையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

temple

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம்தான் அது. அம்பாள் தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து, ஸ்ரீசிறுபிடியீசர், ஸ்ரீசூட்சுமபுரீஸ்வரர் என்ற திருநாமங்களோடு வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு ஶ்ரீமங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோயில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது.

- Advertisement -

கோயில் உருவான வரலாறு 

திருக்கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட, அதில் பார்வதி வெற்றிபெற்றுவிட்டாள். தோல்வியின் காரணமாக ஏற்பட்ட வெட்கத்தினால், சிவன் திடீரென எங்கோ மறைந்துவிட்டாராம். இதனால் மனக்கவலையடைந்த பார்வதி, ஈஸ்வரனைத் தேடியலைந்து, இந்த ஊருக்கு வந்து மங்கள தீர்த்தம் உண்டாக்கினார். அதில், ஒரு பிடி ஈரமணலை எடுத்து, சிவலிங்கமாகப் பிடித்து சிவனை வழிபட, சுவாமி பிரத்யட்சமாகி பார்வதியை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.  கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர். அது மருவி தற்போது, ‘சிறுகுடி’ என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள். மணலால் பிடித்த லிங்கம் என்பதால்,  அபிஷேகம் செய்வதில்லை.  மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது.

- Advertisement -

temple

முத்துசுப்ரமணிய குருக்கள் இந்த கோவிலை பற்றி கூறியது: “சோழர்காலத்தைச் சேர்ந்த பழைமையான கோயில் இது. செவ்வாய் பகவான் வந்து வணங்கி விமோசனம் பெற்றதால், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு நிவர்த்தி தரும் தலமாகவும் இருக்கு. பெரும்பாலும் கடன்தொல்லை, பயம், தற்கொலை எண்ணம், சண்டை சச்சரவு, வாகன விபத்து, ரத்தம் சம்பந்தமான நோய்கள், மாரடைப்பு, தீயினால் ஏற்படும் காயங்கள் அனைத்தையும் நீக்கி, அருள்தரும் மங்களநாதராக சுவாமி இருக்கிறார்.

temple

புதிதாக  வாகனம் வாங்குபவர்கள் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வந்து  அர்ச்சனை செய்து செல்கிறார்கள். மேலும் புதிதாக வீடு கட்டுபவர்களும் தாங்கள் கட்டும் வீடு  மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மங்களாம்பிகை ஏற்படுத்திய மங்கள  தீர்த்தத்தில் நீராடி, மங்களநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.

- Advertisement -