தாலி சரடு அணிவதில் பல்வேறு பாரம்பரிய ரகசியங்கள் இருக்கின்றன. இவற்றை சரியாக தெரிந்து கொண்டு தாலி சரடை அணிந்துகொண்டால், வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் இருக்காது

thali
- Advertisement -

திருமணம் என்பது “ஆயிரம் காலத்து பயிர்” என்று சொல்வார்கள். இவ்வாறு தொன்றுதொட்டு அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை கல்யாணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கக் கூடிய ஒரு இன்றியமையாத விஷயமாகும். இந்திய கலாச்சாரத்தின் படி திருமண நிகழ்வின் போது பலவித சடங்கு, சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்றுதான் மணமகன் மணமகளை தனது மனைவியாக்கிக் கொள்வதற்காக பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலியாகும். தாலி என்றால் அது மஞ்சள் கயிறில் தான் இருக்கும். ஆனால் காலப்போக்கில் நடைமுறைக்கு ஏற்றவாறு அனைவரும் தாலியை சூடாக மாற்றிப் போட ஆரம்பித்து விட்டனர். இந்த சரடை சரியான முறையில் அணிந்திருந்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். வாருங்கள் இப்படி பெண்கள் அணிந்திருக்கும் தாலி சரடை எந்த முறையில் அணிய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பெண்கள் கழுத்தில் இருக்கும் தாலிக்கொடி எப்பொழுதும் பெண்களின் மார்பு பகுதியில் படுமாறு கட்டியிருக்க வேண்டும். தாலிக்கயிறில் இருக்கும் தங்கமும், மஞ்சளும் பெண்களின் மார்பு குழியில் படும் மாதிரி இருந்தால், அது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையாக இருக்கிறது. இதன் மூலம் மார்பக பிரச்சனைகள் அனைத்துமே சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

இப்பொழுதெல்லாம் தாலியை தங்கத்தில் போடுவது தான் அனைவரின் வழக்கமாக இருக்கிறது. அவரவர் வசதிக்கேற்ப எத்தனை பவுனில் வேண்டுமானாலும் சரடு அணிந்து கொள்ளலாம். ஆனால் அது ஒற்றைப்படையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு பவுன் சரடு வாங்குவதாக இருந்தால் அது இரட்டை படையில் இருக்கிறது. எனவே அதனுடன் ஒரு குண்டுமணி தங்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுபோல 3 பவுனிலும் தாலிக்கொடி அணிந்து கொள்ளலாம். இன்னும் அதிகமாக அணிய வேண்டும் என்றால் 5, 7, 9 என ஒற்றைப்படையில் அணிந்து கொள்ளலாம். 4, 6 இப்படி இரட்டை படையில் அணிவதாக இருந்தால், அதனுடன் அவசியம் ஒரு குண்டுமணி தங்கம் சேர்ப்பதுதான் நன்மையை தரும்.

- Advertisement -

அவ்வாறு என்ன தான் அதிக பவுனில் தாலி சரடு அணிந்து இருந்தாலும், கணவன் மனைவி ஒற்றுமை என்பது சரியாக இருக்க வேண்டும். இவ்வாறு ஒற்றைப்படையில் இல்லாமல் இரட்டை படையில் தாலி சரடு அணிந்து கொண்டால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பிக்கும். அதேபோல் தாலி கயிறை மாற்றுவதற்கு தகுந்த நாள் பார்த்து தான் செய்யவேண்டும்.

தாலிக்கயிறு மாற்றுவதாக இருந்தால் சுபதினத்தில் மட்டுமே செய்ய வேண்டும். நண்பகலுக்கு முன்னராக மாற்ற வேண்டும். அல்லது மாலை நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு புதிய கயிறு மாற்றும் பொழுது அந்த கயிறில் நிச்சயம் மஞ்சள் பூசி இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அன்று பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும். அதன்பிறகு தாலி கயிறு மாற்றும் பொழுது நின்று கொண்டு செய்யாமல் கிழக்குப் பக்கமாக அமர்ந்து கொண்டு தான் செய்ய வேண்டும்.

- Advertisement -