தெரியாமலும் இந்த பொருட்களை தானம் செய்து விடாதீர்கள் கஷ்டங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும்

thaanam
- Advertisement -

பொதுவாகவே தானம் செய்வது என்பது நமக்கு புண்ணியத்தை சேர்க்கும் ஒரு நற்செயல் ஆகும். தானம் செய்யும் ஒவ்வொரு பொருளிற்கும் அவற்றிற்கென்று தனிப்பட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. நீங்கள் தானம் செய்யும் பொருளை வைத்தே உங்களுக்கான பலன்கள் உங்களை வந்தடையும். எனவே உங்களுக்கு நல்ல பலன்களை உண்டாக்கும் பொருட்களை மட்டுமே தானம் செய்திட வேண்டும். ஆனால் நீங்கள் தானமாக கொடுக்கும் ஒரு சில பொருட்களின் மூலம் உங்களுக்கு கஷ்டங்கள் உண்டாகவும் வாய்ப்புள்ளது. எனவே அவ்வாரான பொருட்களை தானம் கொடுப்பது என்பதை தவிர்த்துவிட வேண்டும். அந்த வகையில் தானம் கொடுக்க கூடாத பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றியும், அவற்றின் பாதிப்புகள் பற்றியும், தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவினுள் பயணிப்போம்.

dhaanam

தானம் செய்வதால் பல நன்மைகள் உண்டாகின்றன. நீங்கள் தானம் செய்வதற்கு முன்னர் எந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு பின்னர் தானம் செய்ய வேண்டும். ஏனென்றால் நீங்கள் தானமாக கொடுக்கும் பொருட்கள் ஒரு சில சமயங்களில் உங்கள் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும். எனவேதான் தானம் கொடுக்கும் பொருட்களின் புண்ணிய பலன்களை தெரிந்து கொடுக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

- Advertisement -

தானமாக கொடுக்க கூடாத பொருள்கள் மற்றும் அவற்றினால் உண்டாகும் பிரச்சனைகள்:
வீட்டில் உபயோகப்படுத்தும் பழைய துடைப்பத்தை தானமாக கொடுப்பது என்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே துடைப்பத்தை தானமாகக் கொடுக்கும் பொழுது மகாலட்சுமி தேவியையும் சேர்த்து கொடுப்பதாகவே அர்த்தம். இதனால் வீடுகளில் பண கஷ்டம் ஏற்படும்.

broom-thudaippam

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். இவ்வாறான அன்னத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்றால் புதிய அன்னத்தை மட்டுமே கொடுக்க வேண்டும். பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

அடுத்ததாக மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தானமாக கொடுப்பது என்பது எப்போதும் கூடாது. இவற்றைத் தானமாக கொடுப்பதால் துரதர்ஷடம் உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் உங்கள் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தும்.

plastic-boxes

அடுத்ததாக வீட்டில் உள்ள கூர்மையான பொருட்களான கத்தி, ஊசி, கத்தரிக்கோல் போன்ற பொருட்களை தானமாக கொடுக்கக் கூடாது. இவ்வாறான கூர்மையான பொருட்களை தானமாக கொடுத்தால் குடும்பத்தில் கஷ்டங்கள் உண்டாகும்.

- Advertisement -

வீட்டில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யும் பொருட்களான விளக்கு, கடவுள் படங்கள், சிலைகள் இவ்வாறான எவற்றையும் தானமாக கொடுப்பது என்பது கூடாது. இவற்றைத் தானமாக கொடுக்கும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள அதிர்ஷ்டமும் அவற்றுடன் சேர்ந்து சென்றுவிடும்.

அடுத்ததாக கிழிந்த பழைய துணிகளை தானமாக கொடுப்பது என்பதை தவிர்த்து விட வேண்டும். பழைய துணிகளை தாராளமாக கொடுக்கலாம் ஆனால் அது கிழிந்த நிலையில் இருக்கும்போது கொடுக்கக்கூடாது. இவற்றை தானமாக கொடுப்பதன் மூலம் உங்கள் வீடுகளில் தேவையில்லாத பிரச்சனைகளே உண்டாகும்.

மேற்கூறிய பொருட்களிலிருந்து எவற்றையும் தானமாக கொடுத்து விடாதீர்கள். தானம் கொடுப்பது என்பது உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இவ்வாறான பொருட்களை தானம் கொடுப்பதால் உங்களுக்கு புதிய பிரச்சனைகள் தான் உண்டாகும்.

- Advertisement -