உங்கள் ஆயுசுக்கும் இந்த 1 பொருளை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் தானம் கொடுத்து விடக்கூடாது. அது உங்களுக்கு தீராத தரித் திரத்தை தேடித்தரும்.

நாம் வாழ்கின்ற வாழ்நாளில் தானம் செய்வதன்மூலம் நமக்கு கணக்கில் சொல்லமுடியாத நன்மைகள் வரும். அதே சமயம் சில தானங்களை செய்யும்போது நமக்கு கஷ்டம் வருவதாகவும் சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நாம் வாழ்நாள் முழுவதிலும் எந்த ஒரு பொருளை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் என்பதை பற்றிய ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்களுக்காகவே சொல்லப்படக்கூடிய ஆன்மீக ரீதியான பதிவு இது.

dhaanam

தானத்தில் சிறந்த தானமாக சொல்லப்படுவது அன்னதானம். பசியென்று வந்தவர்க்கு, யாருக்கும் சாப்பாடு இல்லை என்ற வார்த்தையை நம் வாயால் சொல்லக் கூடாது. ஆனால் அதே சாதத்தை நம்முடைய வீட்டில் பழைய சாதமாக வைத்திருந்தால், அந்த பழைய சாதத்தை அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம்.

அதாவது இரவு சாதம் மீதம் ஆகிவிட்டால், அந்த சாதத்தில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி வைத்திருப்போம். மறுநாள் காலை அது பழைய சாதமாக மாறி இருக்கும். அந்த சாதத்தை சிலர் வீட்டில் இருப்பவர்களே உப்பு போட்டு தயிர் ஊற்றி கரைத்துக் குடித்து விடுவார்கள். சிலர் அந்த சாதத்தை பசுமாட்டிற்கு வைப்பார்கள். காகத்திற்கு வைப்பதும் தவறு கிடையாது.

rice

ஆனால் அந்த சாதத்தை பிச்சைக்காரர்களுக்கு தானமாக கொடுத்தாலும், நம் கையால் ஐஸ்வரியம் நம் வீட்டை விட்டு வெளியே சென்று விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த காலத்தில் பழைய சாதம் இருந்தால் தானம் கொடுங்கள் என்று தான் பிச்சை கேட்பார்கள். அந்த பழைய சாதம் என்பது வீட்டில் மிஞ்சியிருக்கும் பழைய சாதத்தை குறிக்கின்றது. அதாவது காலை வடித்த சாதம், மாலையில் மிச்சமிருக்கும் அல்லவா அந்த பழைய சாதம் தான் அது..

- Advertisement -

முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்து, அடுத்த நாள் காலை வரை நம் வீட்டில் இருக்கும் அந்த அன்ன லட்சுமியை, அந்தப் பழையதை நம் கையால் யாருக்கும் தானம் கொடுக்க கூடாது. வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். உங்கள் வீட்டிற்கு வருகை தரும் உறவினர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் விருப்பப்பட்டு கேட்டாலும் சரி அந்த பழைய சாதத்தை அடுத்தவர்களுக்கு சாப்பிடக் கொடுக்காதீர்கள். இதன் மூலம் வீட்டில் தரித்திரம் பிடிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.

rice

முடிந்தவரை வாயில்லா ஜீவன்களுக்கு இதைக் கொடுக்கலாம். பைரவரின் அம்சமான நாய்களுக்கு கூட இந்த சாதத்தை வைக்கலாம் தவறொன்றுமில்லை. முடிந்தவரை சாதத்தை அதிகமாக வடித்து வீணாக்காமல் தேவையான அளவு வடித்துக் கொள்வதே வீட்டிற்கு மிகவும் நல்லது. இதேபோல் இரவு நேரத்தில் வீட்டில் ஒரு கை சாதம் கூட இல்லாமல் மொத்தமாக துடைத்து கவிழ்த்துவிட கூடாது.

இரவு நேரத்தில் சாப்பாட்டு பானையில் ஒட்டியிருக்கும் சாதத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கழுவி, ஒரு சிறிய கிண்ணத்தில் கட்டாயமாக ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அறியாமல் செய்யும் தவறுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது. தெரிந்தே நாம் செய்யக்கூடிய சில தவறுகள் தான், நம்மை கஷ்டத்தில் தள்ளி விடுகின்றது. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.