- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுன்னேற்ற தடையை நீக்கும் பரிகாரம்

முன்னேற்ற தடையை நீக்கும் பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. படிப்பிலோ, வேலையிலோ, தொழிலிலோ, வாழ்க்கையிலோ முன்னேற்றம் என்பது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே ஏற்படும். அப்படிப்பட்ட முன்னேற்றத்தில் ஏதாவது தடைகள் இருக்கும் பட்சத்தில் அந்த தடைகளை விலக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முன்னேற்ற தடையை நீக்கும் பரிகாரம்

பொதுவாக ஒருவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அவருக்கு ஏற்படக்கூடிய கண் திருஷ்டி தான். கல் அடிப் பட்டாலும் படலாம், கண் அடி படக்கூடாது என்று கூறுவார்கள். அப்படி கண் திருஷ்டி என்பது ஏற்பட்டு விட்டால் அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல் நிறைந்த கண் திருஷ்டியை நீக்குவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை அல்லது அமாவாசை தினங்களில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. யாருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டு இருக்கிறதோ அவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பூண்டு ஏழு பல், மொட்டு உடையாத கிராம்பு ஏழு, பச்சை கற்பூரம் ஏழு துண்டுகள், ஒரே ஒரு படிகார கல், ஒரு கடித்துண்டு இவற்றை வைத்து அந்த பேப்பரை நன்றாக மடித்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான மண்சட்டியையோ அல்லது அகல் விளக்கை எடுத்து அதற்குள் நாம் மடித்து வைத்திருக்கும் இந்த பேப்பரை வைக்க வேண்டும். இந்த பேப்பருக்கு மேலாக இரண்டு கற்பூரத்தை வைத்து அந்த கற்பூரத்தை ஏற்றி யாருக்கு கண் திருஷ்டி இருக்கிறதோ, யாருடைய முன்னேற்றத்தில் தடைகள் உண்டாகிறதோ அவர்களை வலது புறமாக மூன்று முறையும், இடது புறமாக மூன்று முறையும், மேலிருந்து கீழாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அந்த எரியும் பேப்பரை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று ஓரமாக வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் எரிந்து சாம்பல் ஆவது போல அவர்களுக்கு இருக்கக்கூடிய தடைகளும் கண் திருஷ்டிகளும் எரிந்து சாம்பல் ஆகிவிடும். ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலேயே அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும். தீவிர கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வாராவாரம் செய்யலாம். அப்படி இல்லாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறை என்று அமாவாசை தினத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு.

இப்படி நாம் இந்த எரியும் பேப்பரை சுற்றும் பொழுது கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு முகமாக பார்த்து நின்று இருக்க வேண்டும். மேலும் அவர்கள் உணவு அருந்தாமல் இருக்க வேண்டும். உணவு அருந்திய பிறகு இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:அஷ்டமி திதியில் செய்ய வேண்டிய பரிகாரம்
நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய இந்த வழிமுறையை நாமும் பின்பற்றி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் விலக்கி கண் திருஷ்டி இல்லாத முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்