- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு

தடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கென்று பல அற்புதமான நாட்கள் இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி என்பது கட்டாயம் அனைவரும் வழிபாடு செய்வதற்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் நம்முடைய வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு வல்லமை படைத்ததாக திகழ்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் நாம் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு விஷயத்தில் தோல்வியை தழுவிக் கொண்டு இருக்கிறோம் என்றால் அந்த தோல்விகள் விலகி வெற்றிகள் உண்டாவதற்காக செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு

நமக்கு இருக்கக்கூடிய காரிய தடைகளை நீக்கும் வல்லமை படைத்த தெய்வங்களாக விநாயகப் பெருமானும் ஆஞ்சநேயரும் திகழ்கிறார்கள். விநாயகப் பெருமானுக்கு உரித்தான மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை ஏதாவது ஒரு வேண்டுதல் முழுமையாக நிறைவேற வேண்டும் என்று நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. எளிமையான கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை எளிமையான முறையில் வழிபாடு செய்ய நம்முடைய காரிய தடைகள் அனைத்தும் எளிதில் நீங்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு தேங்காய் வேண்டும். அந்த தேங்காயின் குடும்பிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு அதை சுத்தம் செய்து அது முழுவதும் மஞ்சளை தடவிக் கொள்ளுங்கள். மூன்று கண்களுக்கு நடுவில் குங்குமத்தை வைக்க வேண்டும். இந்த தேங்காயை நம்முடைய வீட்டு பூஜை அறையில் தாம்பாளத்தில் வைத்து விட வேண்டும். எப்பொழுதும் விநாயகப் பெருமானுக்கு மாலை நேரத்தில் வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொள்வோம் அல்லவா? அந்த வழிபாடுகள் அனைத்தையும் செய்து முடித்த பிறகு இந்த தேங்காயை நம்முடைய கையில் எடுத்து முழுமனதோடு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு மூன்று கண்களுக்கு நடுவே இருக்கும் குங்குமப்பொட்டு நம்முடைய இரண்டு புருவ மத்தியில இருப்பது போல் வைத்துக் கொண்டு நமக்கு எந்த காரியத்தில் அதிக அளவில் தடைகள் இருக்கிறதோ எந்த காரியம் நடைபெறாமல் தடைப்பட்டு கொண்டே இருக்கிறதோ அந்த காரியம் விரைவில் நடைபெற வேண்டும் என்று விநாயகப் பெருமானிடம் சங்கல்பத்தை வைக்க வேண்டும்.

இப்படி குறைந்தது ஐந்து நிமிடமாவது நாம் அந்த தேங்காயை நம்முடைய புருவ மத்தியில் வைத்து நம்முடைய வேண்டுதலை முன் வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து தேங்காயை தாம்பாள தட்டில் வைத்து விட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். இப்படி தொடர்ச்சியாக நாம் ஐந்து நாட்கள் செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தொடங்கிய இந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை வரை மாலை 6:00 மணிக்கு வீட்டில் தீபம் ஏற்றி விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு தேங்காயை எடுத்து புருவ மத்தியில் வைத்து வேண்டுதலை முன்வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்யக்கூடிய இந்த ஐந்து நாட்களும் விநாயகர் பெருமானை நினைத்து விரதம் இருக்க வேண்டும். உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அசைவத்தை தவிர்த்து விட்டு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஐந்து நாட்கள் இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு ஆறாவது நாள் அதாவது ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தேங்காயை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகும். இந்த வழிபாட்டை குடும்பத்தில் ஒருவர் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. குடும்பத்தில் இருக்கக்கூடிய இரண்டு மூன்று நபர்களுக்கு அவர்களுடைய காரியத்தில் தடைகள் இருக்கும் பட்சத்தில் இரண்டு மூன்று தேங்காயை வைத்து அவரவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினையை தீர்க்கும் மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

தெய்வங்களுக்கு சமர்ப்பணம் செய்யக்கூடிய அற்புதமான பொருட்களை ஒன்றாக திகழ்வதுதான் தேங்காய் இது சிவபெருமானுக்கு சரிசமமாக கருதப்படக் கூடிய ஒன்று என்றும் புனித தன்மை மிகுந்த ஒன்று என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தேங்காயை வைத்து விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு தடைகள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்