நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் ஏற்படும் பொழுது அந்த கஷ்டத்தில் இருந்து நம்மை காப்பாற்றக்கூடியவர்களாக தான் தெய்வங்கள் திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்யும்பொழுது அதற்குரிய பலன்கள் என்பது மாறுபடும். மேலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான நேரங்கள் மிகவும் உகந்த நேரங்களாகவே கருதப்படுகின்றன. அந்த நேரங்களில் நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வம் நமக்கு அதிகப்படியான பலனையே வாரி வழங்குவார்கள். அந்த வகையில் நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் கடைசி நேரத்தில் தோல்வி அடைந்து விட்டது, எவ்வளவு முயற்சி செய்தும் வெற்றியடையவில்லை என்று வருத்தப்படுபவர்கள். அவர்களுடைய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்பட வேண்டும் என்பதற்காக விநாயகப் பெருமானை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தையும் அதே சமயம் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
அனைத்து தடைகள் நீங்க வழிபாடு
காரிய தடையை நீக்க கூடியவர் என்று விநாயகப் பெருமானை கூறுவது உண்டு. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுவார்கள். ஒரு சிலர் முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது விநாயகப் பெருமானுக்கு சிதர் தேங்காய் உடைத்து விட்டு போவார்கள். அப்பொழுது அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலகும் என்று நம்பப்படுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் கடைசி நேரத்தில் அந்த முயற்சி தோல்வியை சந்திக்கும் பொழுது நமக்கு மிகப்பெரிய வருத்தமே ஏற்படும். அப்படி கடைசி நேரத்தில் தட்டிப் போகக்கூடிய பலவிதமான காரியங்களையும் நமக்கு சாதகமாக மாற்றுவதற்கு விநாயகப் பெருமான் அருள் புரிவார். அப்படிப்பட்ட ஒரு வழிப்பாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.
இந்த விநாயகர் வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய எமகண்ட நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு கடைசி நேரத்தில் தள்ளிப் போகக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் என்பது பகல் 3 மணியிலிருந்து 4:30 மணிக்குள் வரும். இந்த நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு முன்பாக ஒரு பெரிய கட்டி கற்பூரத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். கையில் ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானை எட்டு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு எட்டு முறை வலம் வந்த பிறகு அந்த தேங்காயை கையில் வைத்துக் கொண்டே விநாயகப் பெருமானிடம் கடைசி நேரத்தில் தடங்கலாகிக் கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். இந்த முறையில் நம்முடைய காரியம் வெற்றி அடையும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாக செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: சுபகாரிய தடையை நீக்கும் குரு வழிபாடு
எவ்வளவு முயற்சி செய்தும் வெற்றிகள் பெறவில்லை என்று வருத்தப்படுபவர்களும் கடைசி நேரத்தில் கைநழுவி சென்று விட்டது என்று கவலைப்படுபவர்களும் விநாயகப் பெருமானை இந்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்ய வெற்றிக்கு மேல் வெற்றியை குவிப்பார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.