- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளை தகர்த்தெறியும் ஆடி செவ்வாய்

தடைகளை தகர்த்தெறியும் ஆடி செவ்வாய்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நடக்க வேண்டிய காரியங்கள் சரியான நேரத்தில் நடக்க வேண்டும். அப்படி சரியான நேரத்தில் நடக்காமல் இருந்தாலும் அல்லது நிரந்தரமாகவே நடக்காமல் போய்விட்டாலோ அதனால் பல விதமான கஷ்டங்களையும் அவமானங்களையும் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளாகாமல் தடைப்பட்ட காரியத்தை நடத்துவதற்கும் இனிமேல் நடக்கக்கூடிய அனைத்து விதமான காரியங்களும் எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெறுவதற்கும் ஆடி செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தடைகளை நீக்கும் வழிபாடு

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்றும் அதீத சக்தி மிகுந்த மாதம் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான சிறப்பு மிகுந்த நாட்களில் ஆடிச் செவ்வாயும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை என்பது முருக வழிபாட்டிற்கு உகந்த கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் அப்படிப்பட்ட ஆடி மாதத்தில் வரக்கூடிய முதல் செவ்வாய்க்கிழமை என்பது பிரதோஷ நாளாக வருகிறது. அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை நாம் வழிபாடு செய்தோம் என்றால் சிவனார் குடும்பத்தையே வழிபட்டதற்கு இணையான பலனை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை ஜூலை மாதம் 22 ஆம் தேதி பிரதோஷ நாளுடன் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் நம்முடைய வாழ்க்கையில் எது தடைப்பட்டு இருந்தாலும் இனிமேல் நடக்கப் போகும் காரியத்தில் எந்தவித தடைகளும் வராமல் இருக்கவும் இந்த ஒரு எளிமையான தீப வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த தீப வழிபாட்டை செவ்வாய் ஹோரையில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நம்முடைய வீட்டில் சுத்தமாக தயார் செய்த மஞ்சள் தூள் வேண்டும். ஒருவேளை வீட்டில் தயார் செய்த மஞ்சள் தூள் இல்லை என்பவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கடைகளில் இருந்து மஞ்சள் தூளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு விரலி மஞ்சளை வாங்கி பொடி செய்து அந்த மஞ்சள் தூளை பயன்படுத்துவது நல்ல பலனை விரைவில் தரும்.

இந்த மஞ்சள் தூளை ஒரு தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு விளக்கை வைத்து அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்றி வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு “ஓம் சிவனார் குடும்பமே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை தீபத்தை பார்த்தவாறு 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதின் பலனால் சிவனார் குடும்பம் என்று கூறக்கூடிய சிவன், பார்வதி, பிள்ளையார், முருகர் இவர்கள் அனைவரின் அருளையும் நம்மால் பெற முடியும். இந்த தீபம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை குளிர வைத்துக் கொள்ளலாம். மறுநாள் இந்த தீபத்திற்கு அடியில் இருக்கும் மஞ்சள் தூளை பெண்கள் குளிக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது வீடு துடைக்கும் தண்ணீரில் போட்டு கலந்து வீட்டை துடைக்கவும் செய்யலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: தங்கம் அணியும் விரல் பலன்கள்

அம்மனுக்கு உகந்த மாதத்தில் முருகனுக்கு உகந்த கிழமையில் சிவபெருமானுக்குரிய திதியில் இந்த முறையில் வழிபாடு செய்ய இவர்கள் அனைவரின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்