- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளும் எதிர்மறை ஆற்றலும் நீங்க

தடைகளும் எதிர்மறை ஆற்றலும் நீங்க

- Advertisement -

நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களால் நமக்கு பலவிதமான பாதிப்புகள் உண்டாகும். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதில் தடைகள் வரும். பணவரவில் தடைகள் உண்டாகும். பணவரவை அதிகரிப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் தோல்வி அடையும். மேலும் வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலையும் உண்டாகும். இவை அனைத்தையும் சேர்த்து தான் நாம் தரித்திரம் என்று கூறுகிறோம். இப்படிப்பட்ட தரித்திரத்தை நீங்கி அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு குபேர அஷ்டமி நாளன்று செய்யவேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தடைகளும் எதிர்மறை ஆற்றலும் நீங்க

நம்முடைய கஷ்டங்களை நீக்க்கூடிய கடவுள்களையும், நம்முடைய எதிரிகளையும், நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கக்கூடிய கடவுளாக உக்கிர தெய்வங்களாக திகழ்கிறார்கள். அப்படி நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறைகளை நீக்கக்கூடிய ஒரு தெய்வமாக தான் காலபைரவர் திகழ்கிறார். காலபைரவரை நம் அனுதினமும் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு எந்த விதமான கஷ்டங்களும் இருக்காது என்று கூறலாம். அப்படிப்பட்ட கால பைரவரை அவருக்குரிய திதியான அஷ்டமி திதி அன்று வழிபாடு செய்யும்பொழுது அதிக அளவில் பலன் உண்டாகும்.

- Advertisement -

மார்ச் மாதம் ஏழாம் தேதி மாசி மாதத்தின் வளர்பிறை அஷ்டமி வருகிறது. இது மார்ச் மாதம் ஆறாம் தேதி பகல் 3:56 மணிக்கு தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி பகல் 2:03 மணி வரை இருக்கிறது. அதனால் இரவு அஷ்டமியாக நாம் வியாழக்கிழமையை தான் கருதுகிறோம். அதனால் தான் இதை நாம் குபேர அஷ்டமி என்று கூறுகிறோம். அஷ்டமியும் குபேரருக்குரிய நேரமும் ஒன்று சேர்ந்து வருவதால் இதை நாம் குபேராஷ்டமி என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட குபேர அஷ்டமி நாள் அன்று இரவு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தெரிந்து கொள்வோம்.

இந்த பரிகாரத்தை இன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும். இதற்கு ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் வேண்டும். பிளாஸ்டிக் டம்ளரை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளரில் எட்டு மிளகை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் மூன்று கைப்பிடி அளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பிறகு அதில் நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டுக் கொள்ளுங்கள். இந்த டம்ளரை வீட்டில் ஏதாவது ஒரு அறையில் வைத்து விடுங்கள். டம்ளரை மூடி வைக்கக் கூடாது.

- Advertisement -

இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் எழுந்த உடனே இதை எடுத்து வீட்டிற்கு வெளியே கொண்டு சென்று கால்படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். பிறகு வீட்டிற்கு வந்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் தலைக்கு குளிக்க வேண்டும். ஒரு வேளை உடல்நலம் சரியில்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் மூன்று முறை தலையில் தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம். முடிந்த அளவிற்கு தலைக்கு குளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இப்படி நாம் செய்வதன் மூலம் நம்மை பிடித்திருக்கக் கூடிய தரித்திரங்கள் முற்றிலும் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும். வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் விலகி ஓடும்.

இதையும் படிக்கலாமே:சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் 2025

காலத்திற்கே அதிபதியாக திகழக்கூடிய கால பைரவரை நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை முழுமனதோடு அஷ்டமி இரவு செய்வதன் மூலம் காலபைரவரின் அருளால் அனைத்து விதமான தீமைகளும் விலகி ஓடும் நன்மைகள் தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்