வருடத்தில் 12 மாதங்களில் வரக்கூடிய அமாவாசையிலும் நம்முடைய முன்னோர்களை நாம் வணங்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை தவறாமல் திருப்தியுடன் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தற்போது வரக்கூடிய தை அமாவாசை, இந்த மூன்று அமாவாசைகளும் மிக மிக சிறப்பு வாய்ந்த அமாவாசை திதிகளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.
மற்ற அமாவாசைகளில் முன்னோர்கள் வழிபாட்டை தவற விட்டவர்கள் கூட, இந்த மூன்று அமாவாசைக்கு பித்ரு வழிபாட்டை செய்து விடுங்கள். ஜோதிட ரீதியாக, ஆன்மீக, ரீதியாக கிரக ரீதியாக இதற்குப் பின்பாக நிறைய காரணங்கள் இருக்கிறது. எல்லாமே நம்முடைய நன்மைக்காகத்தான் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்த தை அமாவாசைக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு சூப்பரான வழிபாட்டை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டு கூட இருக்க மாட்டீங்க.
இதை வழிபாடு என்று செல்வதா, பரிகாரம் என்று சொல்லுவதா, அல்லது நம்முடைய முன்னோர்களை மறக்காமல் இருப்பதற்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய வழிகாட்டுதல் என்று சொல்லுவதா, நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். பதிவை படித்துவிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நிறைய பேருக்கு இந்த இடத்தில் நிறைய சந்தேகம் வரும். நாம் மட்டும் தான் முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றோம். ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லாம் அதை செய்கின்றார்களா. அவர்கள் ஓஹோ என பணக்காரர்களாக இருக்கிறார்களே, அவர்கள் இதையெல்லாம் பின்பற்றுகிறார்களா? என்று சில பேர் விதண்டாவாதம் பேசுவார்கள்.
அவர்களுக்கான பதில் தான் இது. சீனர்களும் முன்னோர்களை வணங்குவதற்கு ஒரு திருவிழா கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வாழ்பவர்களும் தங்களுடைய முன்னோர்களை மறக்காமல் இருப்பதற்கு, ஏழு தலைமுறையினருடைய பெயர்களை எழுதி தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். கேட்டால் ஃபேமிலி ட்ரீ என்று சொல்லுவார்கள். நமக்கு தெரியுமா? ஏழு தலைமுறை முன்னோர்களுடைய பெயர்? உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கள்.
ஏழு தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த தாத்தா பாட்டி பெயர், முக்கால்வாசி பேருக்கு தெரியாது. ஏன் யாருக்குமே தெரியாது. 3 தலைமுறை பெயர் தெரிந்தாலே இன்றைய காலகட்டத்தில் அது பெரிய விஷயமாக இருக்கிறது.
இந்த தை அமாவாசைக்கு உங்களுடைய தாத்தா பாட்டியிடம் கேட்டு, கொள்ளு தாத்தா பாட்டி இருந்தால் அவர்களிடம் கேட்டு, ஏழு தலைமுறையினருடைய பெயரை எழுதி உங்களுடைய அடுத்த சந்ததியருக்கு சொல்லிக் கொடுங்கள். எங்கள் வீட்டில் முன்னோர்கள் எல்லாம் மறைந்து விட்டார்கள் என்றால் முன்னோர்களது பெயரை தெரிந்து கொள்ள வேறு ஏதாவது வழி இருக்கிறதா வேறு சொந்த பந்தங்களிடம் அவர்களது பெயரை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
நம்முடைய உடம்பில் ஓடும் ரத்தத்தில் நம்முடைய முன்னேறுகளின் டி.என்.ஏ தான் கலந்து இருக்கிறது. நாம் நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க கூடிய இந்த நாளில் நமக்கு நாமே நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நம்முடைய முன்னோர்கள், ஏதோ ஒரு டி.என்.ஏ வின் மூலம் நம்முடைய உடம்பில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அவர்கள் ஏதேனும் கஷ்டத்தை அனுபவித்து இருந்தால், அந்த கஷ்டத்தின் மூலம் நிச்சயம் நமக்கு பாதிப்பு வரும். ஏனென்றால் அவர்களுடைய டிஎன்ஏ தான் இப்போது நம்முடைய உடம்பில் இருக்கிறது. நமக்கு ஏதாவது தீராத வியாதிகள் வந்துவிட்டால் கூட, டாக்டர்கள் சொல்லுகிறார்கள். உன்னுடைய அம்மா அப்பாவுக்கு, தாத்தா பாட்டிக்கு இந்த பிரச்சனை இருந்திருந்தால் தான் உனக்கும் இந்த பிரச்சனை வரும் என்று. அதேபோல தான் அம்மா அப்பா தாத்தா பாட்டி வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது கஷ்டங்கள் வந்திருந்தால், அந்த கஷ்டம் நம்மையும் பின் தொடரும்.
நம்முடைய முன்னோர்களுக்கு இருந்த கஷ்டங்கள் நம்மை பின்தொடராமல் இருக்க வேண்டும் என்றால், நம்முடைய முன்னோர்களை நினைத்து நாம் நன்றி கடன் செலுத்த வேண்டும். அதற்காகத்தான் நம்முடைய முன்னோர்கள், இந்த அமாவாசை நாளை வைத்திருக்கிறார்கள். அமாவாசை திதி தர்ப்பண காரியங்களை எல்லாம் முடித்து விடுங்கள். நீங்களும் ஃபேமிலி சார்ட் ஒன்றை எழுதுங்கள்.
அந்த ஃபேமிலி ட்ரீயில் உங்களுடைய ஏழு தலைமுறைகளுடைய பெயரையும் எழுதி, உங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். ஏழு தலைமுறைகள் வாழ்ந்த அந்த முன்னோர்களின், பெயரைச்சொல்லி அவர்களுக்கு நன்றி சொன்னாலே போதும். நம்முடைய தலைமுறை செழிக்கும் என்பது சான்றோர்களின் கருத்து. பிரபல ஜோதிடர்களின் கருத்து. அதைத்தான் நாமும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றோம்.
இதையும் படிக்கலாமே: தடைகளை நீக்கும் தை ஞாயிறு வாராகி வழிபாடு
இந்த தை அமாவாசை நாளில் உங்களுடைய முன்னோர்களின் பெயர்களையும் எழுதுங்கள். அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். வழிபாட்டோடு சேர்ந்து நீங்கள் செய்யக்கூடிய இந்த சிறிய காரியம், உங்கள் தலைமுறையை வாழ்த்தும். உங்களுக்கு முன் வாழ்ந்து முடிந்த ஏழேழு தலைமுறைகளின் வாழ்த்துக்களும் உங்கள் பரம்பரைக்கு கிடைக்கும். நீங்கள் நன்றாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.