நாளைய தினம் தை மாதம் 16ஆம் தேதி, தை மாத அமாவாசை திதியானது வரவிருக்கிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி தர்ப்பண காரியங்களையும், முன்னோர்களுக்கு போட வேண்டிய படைகளையும் தவறாமல் போட்டு விடுங்கள். இதோடு சேர்த்து புண்ணியத்தை தேடி தரும், பாவத்தை குறைக்க கூடிய இரண்டு விதமான தானங்களை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த தானங்களை பற்றியும் பெரும்பான்மையானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு.
தை மாதம் அமாவாசை திதி தர்ப்பணம், செய்ய வேண்டிய நேரம்:
நாளைய தினம் புதன்கிழமை தை அமாவாசை திதி வந்திருக்கிறது அல்லவா. சூரியன் உதயத்திற்கு பிறகு தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது சாஸ்திரம். நாளை காலை 6:00 மணியிலிருந்து 7:20 மணி வரை தர்ப்பணம் கொடுப்பதற்கு நல்ல நேரம். அந்த நேரத்தை தவிர விட்டால், நாளை காலை 9:10 மணியிலிருந்து 11:55 மணி வரை தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரமாக சொல்லப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் முன்னோர்களுக்கு படையல் போட முடியும் என்றாலும் படையல் போட்டு வழிபாட்டை செய்யலாம் இந்த நேரத்தை தவறவிட்டவர்கள், முன்னோர்களுக்கு படையல் போட வேண்டும் என்றால் மதியம் 1:30 மணிக்கு, முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாட்டை செய்து விட்டு, காகத்திற்கு சாதத்தை வைத்து விட்டு, விரதம் இருப்பவர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
முன்னோர்கள் வழிபாடு செய்யும் போது, கூடவே இந்த அமாவாசை திதியில் கட்டாயம் நம் செய்ய வேண்டிய தானம் அன்னதானம். இரண்டு வயதானவர்களுக்காகவது உங்கள் கையால் சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். பசியோடு இருப்பவர்களுக்கு இந்த தானத்தை செய்வது கோடான கோடி புண்ணியத்தை தரும்.
இதோடு சேர்த்து வாயில்லா ஜீவன்களுக்கும் நாம் அன்னதானம் செய்ய வேண்டும். குறிப்பாக காகத்திற்கு, பசு மாட்டிற்கு. காகம் நம்முடைய சாஸ்திரத்தில் நம்முடைய மறைந்த முன்னோர்களாக பார்க்கப்படுகிறது. பசுமாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்வதாக நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது. ஆக இந்த இரண்டு ஜீவராசிகளுக்கு நாளை தானம் செய்வது சிறப்பு.
காகத்திற்கு எல்லோரும் மதியம் சாப்பாடு வைத்துவிட்டு தான் உங்களுடைய மதிய உணவை எடுத்துக் கொள்வீர்கள். அது எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் கருப்பு எள்ளு கலந்த சாதத்தை நாளைய தினம் காகத்திற்கு வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்க அமாவாசைக்கு எந்த வழிபாடும் செய்ய வில்லை. 2 எள்ளு பருப்பி வாங்கி, லேசாக இடித்து அதை உங்கள் கையால் காகத்திற்கு வைத்து விடுங்கள் போதும்.
முன்னோர்கள் ஆசி உங்களுக்கு கிடைத்துவிடும். ஒரு கட்டு அகத்திக்கீரை வாங்கி பசு மாட்டிற்கு கொடுத்து விடுங்கள். உங்களுக்கான முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைத்துவிடும். இது தவிர பசு மாட்டிற்கு இன்னும் கொஞ்சம் பொருட்களை வாங்கி தருவதற்கு, உங்களுக்கு வசதி இருக்கிறது என்றால், அந்த பசு மாட்டிற்கு இந்த தை மாதம் முழுவதும் தேவையான உணவை வாங்கி தானமாக கொடுக்கலாம்.
எள்ளு புண்ணாக்கு, வைக்கோல், அந்த பசு மாட்டிற்கு தேவையான தீவனம், இந்த பொருட்களை வாங்கி பசுமாடு பராமரித்து வருபவர்களிடம் தானம் கொடுக்கலாம். உங்கள் வீட்டு பக்கத்தில் சிவன் கோவிலில் கோசாலை இருந்தால் அந்த இடத்தில், அந்த பசுவை பராமரிப்பவர்களிடம் உங்கள் கையால் இந்த பொருட்களை தானம் கொடுத்து விடுங்கள். அதை தேவையான அளவு அவர்கள், பசு மாட்டிற்கு தேவையான போது கொடுப்பாங்க. இந்த தானம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
தாய் தந்தை இல்லாதவர்கள், அல்லது தாய் தந்தையில் யாராவது ஒருவர் இல்லை என்றாலும் அவர்கள் கட்டாயம் அமாவாசை திதி அன்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். தாய் தந்தை இருப்பவர்களுக்கு பெருசாக எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. நீங்கள் எப்போதும் போல இருந்து கொள்ளலாம். ஆனால், தாய் தந்தை இருப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, அமாவாசை அன்று அசைவம் சாப்பிடக்கூடாது, முடி வெட்டக்கூடாது, நகம் வெட்டக்கூடாது ஷேவிங் செய்யக்கூடாது இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளவும்.
தை அமாவாசை அன்று வீதியில் சுற்றி திரியும் மாடுகளுக்கு அகத்திக்கீரை வாங்கி கொடுத்தால் சாப்பிடாது. எல்லோரும் அமாவாசை திதி அன்று மட்டும் பசுவிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் என்று சாப்பிட கொடுத்து கொடுத்து அந்த மாடுக்கு வயிறு நிரம்பி இருக்கும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மட்டும் எல்லோரும் கொண்டு போய் அந்த பசு மாட்டிற்கு உணவை திணிக்க கூடாது
இதையும் படிக்கலாமே: திருஷ்டி போக்கும் கிராம்பு
அமாவாசை அன்று அகதிக் கீரை வாங்கி கொடுப்பது நல்லது. அதற்காக அமாவாசைக்கு மட்டுமே இதை செய்யாதீங்க மற்ற நாட்களிலும் பசுவிற்கு காகத்திற்கு உணவு போடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.