நிலையற்று திகழக் கூடியவளாக திகழ்பவள்தான் மகாலட்சுமி தாயார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் மகாலட்சுமி தாயாரை அனுதினமும் நாம் வழிபாடு செய்து நம்முடைய வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் அனுதினமும் மகாலட்சுமி பூஜையை செய்வது சிறப்பு. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஹோரையில் நாம் மகாலட்சுமி பூஜையை செய்தோம் என்றால் அதன் பலனால் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் விசேஷமான வெள்ளிக்கிழமையாக கருதப்படக் கூடிய தைவெள்ளி என்பது மகாலட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அன்று எந்த முறையில் மகாலட்சுமியை வழிபாடு செய்தால் செல்வ செழிப்பு உயரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தனலட்சுமி பூஜை செய்யும் முறை
பொதுவாகவே மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை வழிபாடு சிறப்புக்குரியது என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் தை வெள்ளி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் தை முதல் வெள்ளியும் கடைசி வெள்ளியும் அதீத பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வருகிறது, அன்றைய தினம் மறவாமல் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். வீட்டு வாசலில் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து பச்சரிசி மாவினால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறைக்கு வந்து மகாலட்சுமிக்கு முன்பாக சுத்தம் செய்து பச்சரிசியுடன் மஞ்சள் தூளை கலந்து ஐஸ்வர்ய கோலத்தை வரைந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று இப்படி ஐஸ்வர்ய கோலத்தை நாம் வரைவதன் மூலம் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக அந்த ஐஸ்வர்ய கோலத்திற்கு நடுவில் ஒரு கண்ணாடி அல்லது வெள்ளி கிண்ணத்தை வைத்து அதில் சில்லறை காசுகளை கோபுரமாக குவித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சில்லறை காசுகளை தான் நாம் தனலட்சுமியாக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு செண்பக மலர்கள் மிகவும் பிடிக்கும். செண்பக மலர்களால் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது விரைவிலயே நமக்கு மகாலட்சுமி தாயார் அருள் புரிவார் என்று கூறப்படுகிறது. இந்த செண்பக மலர்களை சாதாரணமாக அர்சிப்பதற்கு பதிலாக சுத்தமான சந்தன கட்டையை வாங்கி வந்து பன்னீர் ஊற்றி உரசி அந்த சந்தன குழம்பை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூறி இந்த செண்பக மலர்கள் ஒவ்வொன்றையும் சந்தன குழம்பில் தொட்டு தனலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் அஷ்ட லட்சுமிகளின் அருளையும் நம்மால் பெற முடியும். நெய்வேத்தியமாக மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான கற்கண்டு பொங்கல், பால் பொங்கல், பால் பாயாசம் போன்றவற்றை செய்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். இந்த பூஜையை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேலோ அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளோ செய்வது மிகவும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே:தீர்க்க முடியாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க
இந்த முறையில் தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது நிலையற்ற மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக தங்குவாள் என்று கூறப்படுகிறது. முழுமனத்துடன் செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.