ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளுக்கும் கஷ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாக திகழக்கூடியது அவர்களை சுற்றி இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் தான். அந்த எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் விளக்குவதற்கு நம்முடைய முன்னோர்கள் பலவிதமான பரிகாரங்களை சொல்லி இருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லிய பரிகாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் ஒவ்வொரு மாத கடைசி நாளிலும் செய்ய வேண்டிய திருஷ்டியை விளக்கக்கூடிய ஒரு பரிகாரம். அந்த வகையில் தை மாதத்தின் கடைசி நாள் அன்று எலுமிச்சம் பழத்தை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தை கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
நாம் எவ்வளவுதான் பெரிய ஆளாக இருந்தாலும் சிறிய ஆளாக இருந்தாலும் நம்மையும் பார்த்து பொறாமை படக்கூடியவர்கள் என்பவர்கள் கண்டிப்பான முறையில் இருப்பார்கள். மேலும் நம்முடைய முன்னேற்றத்தில் தடைகளை ஏற்படுத்தக் கூடியவர்களும் கண்டிப்பான முறையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி நம்முடைய வாழ்க்கையை நல்ல முன்னேற்றமான வாழ்க்கையாக மாற்றுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான எலுமிச்சை பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை தை மாதத்தின் கடைசி நாளான பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும். இதற்கு ஒரு எலுமிச்சம் பழம் வேண்டும். இந்த எலுமிச்சம் பழத்தை வலது கையில் வைத்துக்கொண்டு நம்முடைய தலையை வலதுபுறமாக எட்டு முறையும் இடது புறமாக எட்டு முறையும் சுற்ற வேண்டும். பிறகு ஒரு குண்டூசியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஊசியை வைத்து “ஓம் ரீம் நசி நசி” என்று கூறி ஒரு முறை குத்த வேண்டும். இப்படி நம்முடைய வயதுக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு முறையும் இந்த மந்திரத்தை கூறி குண்டூசியால் குத்த வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு 30 வயது என்றால் 30 முறை இந்த மந்திரத்தை கூறி 30 முறை எலுமிச்சம் பழத்தில் குண்டூசியை வைத்து குத்த வேண்டும். பிறகு குத்திய இடத்தின் மேல் குங்குமத்தை தடவி வீட்டிற்கு வெளியே சென்று போட்டு விட வேண்டும். மறுபடியும் திரும்ப வீட்டிற்குள் வந்து ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து அதில் 2 கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு கலந்து குளித்துவிட வேண்டும்.
பிறகு வீட்டு பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி நீங்கள் குருவாக எந்த சித்தரை நினைத்திருக்கிறீர்களோ அந்த சித்தரை நினைத்துக் கொண்டு கையில் விபூதியை வைத்துக்கொண்டு அதே மந்திரத்தை கூறி என்னை சுற்றி இருக்கக் கூடிய பிரச்சினைகளும் கஷ்டங்களும் நசுங்கிப் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு நெற்றி நிறைய விபூதியை பூசி விட வேண்டும். பிறகு படுத்து உறங்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்த பிறகு உணவு எடுத்துக்கொள்ள கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த சித்தரையும் குருவாக நினைக்கவில்லை என்னும் பட்சத்தில் அகத்திய பெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:தரித்திரம் நீங்க வெந்தயம்
இந்த முறையில் தை மாதத்தின் கடைசி நாளன்று எலுமிச்சம் பழத்தை வைத்து நாம் பரிகாரம் செய்வதன் மூலம் நம்மை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். எந்தவித தொல்லைகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.