நம் வீட்டை விட்டு போகவே மாட்டேன் என்று அடம் பிடித்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் தரித்திரம் மற்றும் பீடை ஆகியவற்றை வீட்டை விட்டு ஓட ஓட விரட்டி அடிக்க ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும், எளிதாக காரியத்தை முடித்து விடலாம். நமக்கு நல்லதே நடக்காதா? என்று யோசிப்பவர்கள் உங்களை சுற்றி இருக்கும் தரித்திரம், பீடையை முதலில் ஒழித்துக் கட்டுங்கள். அதற்கு செய்ய வேண்டியது என்ன? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நம் வீட்டில் இருக்கும் தரித்திரம், பீடை, நம்மை பிடித்த தீயவைகள் யாவும் நம்மை விட்டு நீங்கி விடுவதற்கு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வைத்து இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யலாம். முதலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான மண் அகல் விளக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய விளக்காக இருந்தாலும் சரி, பழைய விளக்காக இருந்தாலும் சரி, கழுவி சுத்தம் செய்து கொண்டு பின் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அகல் விளக்கில் எடுத்து வைத்துள்ள ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, கொஞ்சம் தண்ணீரை அதன் மீது தெளித்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு போய் பூஜை அறையில் வையுங்கள். தினமும் பிரார்த்தனை செய்யும் பொழுது அகல் விளக்கில் இருக்கும் வெந்தயத்திற்கு தண்ணீரை தெளித்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து தெளித்து வந்தால் சில நாட்களிலேயே வெந்தயம் முளை விட ஆரம்பிக்கும்.
நன்கு முளை விட்ட பின்பு வெந்தயத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் ஓடிக் கொண்டிருக்கும் நீர் நிலைகளில் விட்டு விட வேண்டும். இந்தக் கீரையை பயன்படுத்தக் கூடாது. ஓடும் நீர் நிலைகள் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள், அதை யாருடைய கால்களிலும் படாதவாறு எங்கேனும் செடி, கொடிகளில் போட்டு விடுங்கள். மீண்டும் அகல் விளக்கை சுத்தம் செய்து இதே போல வெந்தயத்தை போட்டு தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
வெந்தயம் கெட்டவைகளை கிரகிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. நம் வீட்டில் இருக்கக்கூடிய துர் சக்திகளை அது விரட்டி அடித்து விடும். நேர்மறையான ஆற்றல்களை வெளியிடக்கூடியது, முளைவிட்ட வெந்தயம்! வெந்தயம் முளை விட ஆரம்பிக்கும் பொழுதே வீட்டில் இருக்கக்கூடிய பீடை, மூதேவி, தரித்திரம் அனைத்தும் நம்மை விட்டு வெளியில் சென்று விடும். இதனால் குடும்பத்தில் நல்லவைகள் நடக்கும்.
இதையும் படிக்கலாமே:
செய்தொழில் உயர சூரிய வழிபாடு
உங்களுக்கு அல்லது குடும்பத்திற்கு நடக்க வேண்டிய நல்லவைகள் யாவற்றையும் தடுப்பது தரித்திரம். இந்த தரித்திரம் நம் சில வேண்டாத நடவடிக்கைகளின் மூலம் நம்மை தொற்றுகிறது. வீட்டில் தலை முடியை வாரக் கூடாது. அது மூலை முடுக்குகளில் சுற்றி உலவிக் கொண்டு இருந்தால் தரித்திரம் பிடிக்கும். வீட்டிற்கு வெளியே சென்று வந்த பின்பு பின்னங் கால்களில் தண்ணீர் படும்படி நன்கு கால்களை கழுவ வேண்டும். சரியாக கால் கழுவாமல் வீட்டிற்கு உள்ளே நுழைபவர்கள் இல்லத்தில் கண்டிப்பாக பீடை வந்து அமர்ந்து கொள்ளும். இது நம்முடைய வளர்ச்சியை தடை செய்யும். குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு உடல் அசதியை அதிகரிக்க செய்யும். சோம்பேறித்தனத்தை கொடுக்கும். நாம் முயன்றாலும் நம்மால் சுறுசுறுப்பாக செயலாற்ற முடியாமல் செய்யும். எதிர்பாராத செலவுகளை உண்டு பண்ணும். இவற்றை விரட்டியடிக்க இந்த எளிய பரிகாரத்தை முயற்சிக்கலாமே!