- Advertisement -

கெட்ட சகுனங்கள் ஏழு

- Advertisement -

ஒரு சில விஷயங்கள் நம்மை காப்பதற்காகவே இடையூறாக வந்து சேரும். ஐயோ.. இப்படி நடந்து விட்டதே.. என்று வருத்தம் கொள்ளாமல், “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது” என்று நிம்மதி கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் ஆபத்து வரப் போவதாக சில எதிர்மறையான விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது, இது கெட்ட சகுனம் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் இந்த ஏழு விஷயங்களும் கெட்ட சகுனமாகவும், ஆபத்து வரக் கூடியதாகவும் உணர்த்துவதாக முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். வாருங்கள் அதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து காண்போம்.

முதலாவதாக நாம் வெளியில் கிளம்பும் பொழுது கால் தடுக்க நேர்ந்தாலும், தலையில் இடித்துக் கொண்டாலோ அதை கெட்ட சகுனம் என்று சொல்லுவார்கள். ஓரிரு நிமிடங்கள் அமர்ந்துவிட்டு தண்ணீர் அருந்திவிட்டு பிறகு வெளியில் கிளம்ப வலியுறுத்துவார்கள். கால சக்கரம் நமக்கு எதிராக சுழலும் பொழுது, நாம் செய்த புண்ணிய கர்ம வினையானது அதிலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக இது போல வேலை செய்யும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

- Advertisement -

இரண்டாவதாக வீட்டில் துளசி செடி இருந்தால் அது திடீரென காய்ந்து உலர ஆரம்பித்தால், அதுவும் கெட்ட சகுனமாக சொல்லப்படுகிறது. நன்றாக இருந்த துளசி செடி, திடீரென காய்வது குடும்பத்திற்கு ஆகாது. ஏதோ ஒரு நிதி சார்ந்த ஆபத்து வர காத்திருக்கிறது என்பதை குறிக்கும்.

மூன்றாவதாக பணத்தை தொலைத்து விட்டு வருவது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. பத்திரமாக வைத்திருந்த பணம் நம்மை அறியாமல் எங்காவது தொலைக்க நேர்ந்தால், பெரிய ஆபத்து வரப் போகிறது என்பதை குறிக்கிறது. கட்டுக்கடங்காத செலவுகளும், மருத்துவ செலவுகளும் வரக்கூடும். நான்காவதாக வீட்டில் நெய் அல்லது எண்ணெய் இருந்தால் அது கீழே கொட்ட கூடாது. கை தவறி நெய், எண்ணெய் போன்ற விஷயங்கள் கீழே கொட்டி விட்டால், அதுவும் கெட்ட சகுனமாக கொள்ளப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் நடக்கும் பொழுது ஜாக்கிரதையாக எதையும் கையாள வேண்டும்.

- Advertisement -

ஐந்தாவதாக வீட்டில் பல்லி இருந்தால் அது நல்ல சகுனம் என்று சொல்லுவார்கள். பல்லி விழும் பலன் என்ன? என்று நம் வீட்டு கேலண்டர் கூட சொல்லிவிடும். வீட்டில் பல்லி இருப்பது அதிர்ஷ்டம் தரும் என்பார்கள், ஆனால் வீட்டில் இரண்டு பல்லிகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டால், அது கெட்ட சகுனமாக சொல்லப்பட்டுள்ளது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் வம்பு, வழக்குகளும் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்த்துவதாக சொல்ல வேண்டும்.

ஆறாவதாக பூஜை செய்யும் பொழுது ஆரத்தி காண்பிக்க வேண்டும். வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் கற்பூர ஆரத்தி கொண்டு போய் காண்பிக்க வேண்டும் அப்போது தான் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். இப்படி ஆரத்தி காண்பிக்கும் பொழுது, ஒரு முறைக்கு மேல் சில சமயங்களில் நெருப்பு அணைந்து போகும். ஆரத்தி அணைவது கெட்ட சகுனமாக நம் முன்னோர்கள் சொல்லுகின்றனர். இது போன்ற சமயங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்று சொல்லியுள்ளனர்.

இதையும் படிக்கலாமே:

ஏழாவதாக யாராவது நீங்கள் கடந்து செல்லும் பாதையில் அல்லது உங்கள் தெருவில் இறந்தவர்கள் சடலத்தை வைத்திருந்தால் அதை பார்க்காமல் தவிர்த்து விட்டு வேறு வழியில் செல்லக்கூடாது. இதுவும் கெட்ட சகுனத்தை குறிக்கிறது. ஒன்று துக்க நிகழ்வில் கலந்து கொண்டு சடலத்தை பார்த்து வர வேண்டும். இல்லையேல் வெளியில் எங்கும் செல்லாமல், அன்றைய நாளை தவிர்க்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் நமக்கு பதட்டத்தையும், எதிர்மறை எண்ணங்களையும் அந்த சமயங்களில் தோற்றுவித்தால், “நாராயண கவசம்” படித்தால் துன்பம் நீங்கும்.

சற்று முன்