தை கிருத்திகை முருகர் வழிபாடு

murugan vazhipadu
- Advertisement -

முருகப்பெருமானை வழிபட எண்ணற்ற திதிகள் கிழமைகள் இருந்தாலும் கிருத்திகை வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் மூன்று கிருத்திகை மிகவும் விசேஷமானது. ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை. இந்த மூன்றிலும் முருகப் பெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

சிவபெருமானின் அருளால் உதித்த முருகப்பெருமானை ஆறு கார்த்திகை பெண்களும் வளர்த்ததால் கார்த்திகை பெண்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிருத்திகை அனுஷ்டிக்கப்படுகிறது. ஆகையால் தான் மற்ற நாட்களை விட கிருத்திகை வழிபாடு மிகவும் உகந்ததாக போற்றப்படுகிறது. அந்த வகையில் இன்று தைக் கிருத்திகையில் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கேட்டது கிடைக்க தை கிருத்திகை வழிபாடு

இன்றைய தினம் கிருத்திகை திதியானது காலை 5:30 மணிக்கு தொடங்குகிறது. கிருத்திகையில் விரதம் இருப்பவர்கள் எப்போதும் போல விரதம் இருந்து இந்த பூஜையை செய்யலாம். அப்படி இருக்கவில்லை என்றாலும் பரவாயில்லை எளிமையான உணவுகளை எடுத்துக்கொண்டு இந்த வழிபாடு செய்யுங்கள்.

இந்த வழிபாட்டை இன்று மாலை ஐந்து முப்பது மணியிலிருந்து இரவு பத்து மணி வரையிலான காலத்தில் செய்யலாம். இந்த வழிபாடு செய்வதற்கு உங்கள் வீட்டில் முருகப்பெருமான் சிலையோ, வேலோ இருந்தால் அவற்றுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். முருகப்பெருமான் படம் இருந்தால் படத்தை பன்னீர் கலந்த தண்ணீரில் துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள.

- Advertisement -

முருகருக்கு நல்ல மணம் மிக்க மலர்களை சூட்டி முருகப் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அடுத்து முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக நட்சத்திர கோலம் போட வேண்டும். அதன் மேல் ஆறு வாழை இலையை வைக்க வேண்டும். ஒவ்வொரு இலையின் மீதும் ஒரு அகல் விளக்கை வைத்து விடுங்கள். இதில் ஒரு விளக்கில் மட்டும் நெய் ஊற்றி கொள்ளுங்கள். மற்ற ஐந்து விளக்கில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

அடுத்ததாக ஆறு நெய்வேத்தியம் வைக்க வேண்டும். அது உங்களால் முடிந்த எளிமையான செய்து வையுங்கள். அதே போல் ஆறு விதமான பூக்களை வைக்க வேண்டும். ஆறு விதமான பழங்களை வைக்க வேண்டும். இவையெல்லாம் தயார் செய்து கொள்ளுங்கள். இப்போது இந்த வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

நட்சத்திர கோலத்தின் மீது ஆறு வாழை இலையை வைக்க வேண்டும். ஒவ்வொரு இலையிலும் ஒரு விளக்கை வைத்து தீபம் ஏற்றுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியம், பழம் வைக்க வேண்டும். இவையெல்லாம் வைத்த பிறகு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் மந்திரமும் அதே போல் ஒவ்வொரு மந்திரத்தையும் ஆறு முறை சொல்ல வேண்டும்.

ஓம் சரவணா போற்றி ஓம்
ஓம் சக்தி வேலா போற்றி ஓம்
ஓம் ஷண்முக போற்றி ஓம்
ஓம் ஓம்கார சொரூபனே போற்றி ஓம்
ஓம் தண்டாயுத பாணியே போற்றி ஓம்
ஓம் செந்தில் ஆண்டவனே போற்றி ஓம்

 

ஒரு மந்திரத்தை சொல்லும் போது முதலாவதாக உள்ள வாழை இலையின் விளக்கில் தீபத்தின் முன்பு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஆறு விதமான மலரில் ஒரு மலரை எடுத்து அர்ச்சனை செய்யுங்கள். அர்ச்சனை செய்யும்போது மேலே குறிப்பிட்ட ஆறு மந்திரத்தில் முதலாவது மந்திரத்தை ஆறு முறை சொல்லுங்கள்.

அடுத்து வாழை இலையில் இருக்கும் விளக்கிற்கு முன்பு அடுத்து ஒரு மலரால் அர்ச்சனை செய்யுங்கள். அப்போது அடுத்த மந்திரத்தை ஆறு முறை சொல்லுங்கள். இதே போல ஒவ்வொரு வாழை இலையில் இருக்கும் விளக்கிற்கும் ஒவ்வொரு பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு விளக்கிருக்கும் ஒரு மந்திரம் என ஆறு விளக்கிற்கு ஆறு மந்திரங்களை ஆறு முறை தனியாக சொல்ல வேண்டும்.

இந்த வழிபாடு முடிந்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு நெய்வேத்தியத்தை கொடுத்து விட்டு அதன் பிறகு நீங்கள் சாப்பிடலாம். தை கிருத்திகை என்று செய்யப்படும் இந்த வழிபாடு மிகவும் பலன் மிக்கதாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர தை கிருத்திகை வழிபாடு

இந்த வழிபாட்டுடன் நீங்கள் கேட்கும் எந்த ஒரு கோரிக்கையும் நிச்சயம் முருகப்பெருமான் நிறைவேற்றுவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தைக்கிருத்திகையில் இப்படி முருகப்பெருமானை வழிபட்டு உங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சந்தோஷமாக வாழுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -