தை மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்தால் அதிகப்படியான பலன்களை நிச்சயம் பெறலாம்.

Pariharam
- Advertisement -

சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற ஒரு மாதமாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியான சில செயல்களை செய்வதற்கும் மிகச்சிறந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. அந்த வகையில் சுப தினங்களான பொங்கல் மற்றும் அதனை தொடர்ந்து தினங்களில் நாம் செய்ய வேண்டிய சில தாந்திரீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

surya-bhagavan1

தமிழ்நாட்டில் போகி, பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் தினங்கள் என நான்கு தினங்களும் சுப தினங்களாகவே கருதப்படுகின்றன. தை மாதத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற் கொள்பவர்கள் இந்த நான்கு தினங்களிலும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த தினங்களில் அன்னதானம், ஆடை தானங்கள் போன்றவற்றை செய்வது சிறப்பான பலன்களை கொடுக்க வல்லதாக உள்ளது.

- Advertisement -

வடமொழியில் “மகர சங்கராந்தி” என அழைக்கப்படும் தை மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் தினத்தன்று சில ஆன்மீக பரிகாரங்களை செய்வதால் அந்த வருடம் முழுவதும் நமக்கு நன்மையான பலன்களை கொடுக்கும். ஒரு வேளை பொங்கல் தினத்தன்று இந்த பரிகாரங்களை செய்ய முடியாவிட்டாலும் அதற்கு அடுத்து வரும் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தினங்களிலும் இந்த பரிகாரங்களை செய்வதால் நன்மையான பலன்கள் நிச்சயம் உண்டாகும்.

kaalai-maadu-cow

தைத்திருநாள் உழவர்கள் மற்றும் ஒட்டுமொத்த உலகத்திற்கே நன்மை பயக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு திருவிழாவாக இருக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க பொங்கல் தினம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் தினங்களில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரியன் உதிக்கின்ற போது சூரிய ஒளி நம்மீது படும் வகையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்வது நல்லது. இதனால் நமது உடலில் தங்கி இருக்கின்ற சூட்சுமமான எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, தோஷங்கள் கழிந்து, உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

- Advertisement -

பொங்கலுக்கு மறுநாள் வருகின்ற மாட்டுப் பொங்கல் தினம் உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு தினமாக இருக்கிறது. பசு மாட்டின் தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இந்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று பசுமாடுகளுக்கு விருப்பமான உணவுகளை வழங்கி அவற்றின் ஆசிகளை பெறுவது நல்லது. அதிலும் குறிப்பாக அகத்திக்கீரை, அருகம்புல், வாழைப் பழங்கள் போன்றவற்றை பசு மாடுகளுக்கு உண்ணக் கொடுத்து, அவற்றை தொட்டு வணங்குவதால் குல சாபங்கள், முற்பிறவி பாவ தோஷங்கள் போன்றவை நீங்கும். தங்கள் வீடுகளில் பசுமாடுகள் வளர்க்க முடியாதவர்களும் கோயில்களில் இருக்கின்ற கோசாலையில் இருக்கின்ற மாடுகள் அல்லது உங்கள் வீடுகளுக்கு அருகில் திரிகின்ற பசு மாடுகளுக்கும் உணவு கொடுத்து வணங்கி தேவர்களின் ஆசிகளைப் பெறலாம்.

naai

மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் தினத்தன்றோ அல்லது அதற்கு பிறகு வரும் பொங்கல் தினங்களில் உங்கள் வீட்டில் சிறிய பூரிகளை செய்து, அவற்றை கடுகு எண்ணையில் பொரித்து, உங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கின்ற கருப்பு நிற நாய்களுக்கு உணவாக கொடுப்பது மிகவும் உன்னதமான பலனை கொடுக்கின்ற ஒரு பரிகாரம் ஆகும். வட இந்திய பகுதிகளில் மிகப்பெரும் செல்வந்தர்கள் தங்களுக்கு வியாபாரங்களில் அதிக அளவு லாபங்கள் உண்டாக பைரவரின் வாகனமான கருப்பு நிற நாய்களுக்கு மேற்கூறிய முறையில் உணவு தரும் பரிகாரத்தை மேற்கொண்டு மிகுதியான பலன்களை பெறுகின்றனர்.

ஒருவேளை பொங்கல் தினத்தில் இந்த பரிகாரங்களை செய்ய முடியாதரவர்கள், முடிந்தவரை தை மாதத்திற்குள் செய்வது நல்லது.

- Advertisement -