என்ன செய்தால் இந்த பொருளாதார பிரச்சனையில் இருந்து உடனடியாக வெளிவர முடியும் என்று, மனிதர்கள் தேடாத வழியே கிடையாது. நிதி பிரச்சனை, கடன் சுமை, வருமானம் இதை பற்றி சிந்திக்காத நாளே கிடையாது. மனிதனது மூளை ஒரு நாள் சாப்பிடக்கூடிய சாப்பாட்டை கூட சிந்திக்காமல் இருக்கும். பணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்காது. ஏனென்றால் பெரிய அளவில் கடன் வந்துவிட்டால், ஒருவாய் சாப்பாடு உள்ளே இறங்காது.
சாப்பாடு நமக்கு தேவைப்படாது. இந்த பண பிரச்சனையை தீர்ப்பதற்கு உண்டான வழி எங்கே என்று, நம்முடைய மனதும் மூளையும் தேடி அலையும். அவ்வளவுதான் உடல் சோர்வும் வந்துவிடும், மனசோர்வு வந்துவிடும், தேவையில்லாத வியாதிகள் நம் உடம்பை பிடித்து ஆட்டிப் படைக்க துவங்கும். எதற்கு இவ்வளவு கஷ்டங்கள். எந்த துன்பமும் வேண்டாம்.
இந்த தை மாதம் எவ்வளவு தூரம் உங்களால் முடியுமோ, அவ்வளவு தூரம் விநாயகப் பெருமானை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்யுங்கள். அதிலும் குறிப்பாக இந்த ஒரு பொருளை வைத்து விநாயகரை வழிபாடு செய்து விட்டு, குபேரரிடம் எவ்வளவு பணம் கேட்டாலும் அதை அவர் கொட்டி கொட்டி கொடுத்து விடுவார், ஏனென்றால் இந்த பொருளுக்கு அவ்வளவு மகிமை. விநாயகனுக்கு அவ்வளவு பெரிய மகிமை. அந்த வழிபாட்டை எப்படி செய்வது. இந்த தை மாதம் முழுவதும் அடிக்கடி நாம் என்ன மந்திரத்தை சொல்லுவது, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
தை மாதம் விநாயகர் வழிபாடு
தற்போது நிலவி வரும் கிரக சூழ்நிலைக்கு நாம் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்களால் எவ்வளவு தூரம் முடியுமோ, விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு உங்கள் கையால் அருகம்புல் கொடுத்து வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு சாத்திய அருகம்புல்லிலிருந்து கொஞ்சம் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள். கோவிலில் அர்ச்சகரிடம் கேட்டாலே கொடுப்பாங்க.
விநாயகர் சன்னிதானத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட அந்த அருகம்புல்லை கொண்டு வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, விநாயகா என்னுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்க வேண்டும், காரிய தடை விலக வேண்டும், மேலும் மேலும் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
முதலில் விநாயகனை பிரார்த்தனை செய்து கொண்டு, பிறகு குல தெய்வத்தையும் குபேரரையும் வேண்டி தேவையான செல்வ வளத்தை கேளுங்கள். நிதி பற்றாக்குறையை சீர் செய்யக்கூடிய அளவுக்கு முதலில், ஒரு பத்து நாட்களில் உங்களுக்கு வருமானம் வந்துவிடும். அதன் பிறகு உங்களுடைய செல்வநிலையை மேலும் மேலும் உயர்த்திக்கொள்ள சேமிப்பை அதிகரித்துக் கொள்ள இந்த விநாயகனே நல்லதொரு வழியை காட்டிக் கொடுப்பான். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.
இந்த மாதம் மட்டுமல்ல, இந்த வருடம் மட்டுமல்ல, எப்போதெல்லாம் உங்களுக்கு தடைகள் தடங்கல்கள் வருகிறதோ அப்போது மட்டும் இந்த மந்திரத்தை சொல்லாமல், எப்போதுமே இந்த மந்திரத்தை சொல்லும்போது தடைகளோ தடங்கல்களோ உங்கள் வாழ்வில் எப்போதுமே வராமல் இருக்கும். இது நிதர்சனமான உண்மை.
வட்டி கட்ட கூட வழி இல்லை, தலையை அடமானம் வைத்தாவது பணத்தை புரட்ட வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள், இன்றே வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகனுக்கு அருகம்புல்லை கொண்டு போய் கொடுத்துவிட்டு, கொஞ்சம் கால் வலிக்கும் அளவிற்கு அந்த விநாயகப் பெருமானை வளம் வந்து இந்த மந்திரத்தை சொல்லி, அந்த அருகம்புல், கொண்டு வந்து வீட்டில் வைத்து பாருங்களேன், நடக்கும் அற்புதத்தை. வாயால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.
மேலே சொன்ன வழிபாடு ஒன்னும் புது வழிபாடு கிடையாது. காலம் காலமாக நம்முடைய பெரியவர்கள் சொல்லுவதுதான். நாம் தான் பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரை வழிபாட மறந்துவிட்டோம். தெருமுனையில் இருக்கும் பிள்ளையாரை வழிபட மறந்து விட்டோம். சில பேர் வீட்டிற்கு வாசலிலேயே விநாயகரை வைத்திருப்பார்கள். ஆனால் கிளம்பி செல்லும்போது அந்த விநாயகருக்கு இரண்டு அரும்புகள் வைத்து அவரை வணங்க வேண்டும் என்பதையே மறந்திருப்பார்கள். அந்த அளவுக்கு வேலையில் அவசரமாக ஓடுகின்றோம்.
இதையும் படிக்கலாமே: கடனை கரைக்கும் காலபைரவர் வழிபாடு
ஆனால் வருமானமும் தேவைக்கு மிக மிகக் குறைவாகத்தான் கிடைக்கிறது. இப்படி எல்லாம் வரும் நிதி பிரச்சனையிலிருந்து தப்பிக்க தற்போது இருக்கும் ஒரே வழி விநாயகர் மட்டும்தான். அவர் பாதத்தை இறுக்கப்பற்றிக் கொண்டால், எந்த கவலையும் இல்லாமல் இந்த உலகத்தில் வாழலாம் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.