- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனை கரைக்கும் காலபைரவர் வழிபாடு

கடனை கரைக்கும் காலபைரவர் வழிபாடு

- Advertisement -

காலபைரவரை வழிபாடு செய்வதற்குரிய திதியாக திகழ்வதுதான் அஷ்டமி திதி. அதுவும் தேய்பிறை அஷ்டமி என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக் கூடிய அஷ்டமியாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி என்பது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவதால் அந்த அஷ்டமியை ருண விமோசன அஷ்டமி என்று கூறுகிறோம். இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த அஷ்டமி தினத்தில் நாம் கால பைரவரை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கடன்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடனை கரைக்கும் காலபைரவர் வழிபாடு

நம்முடைய கஷ்டகாலத்தில் நமக்கு துணை புரியக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர்தான் காலபைரவர். காலபைரவரை முழுமனதோடு அனுதினமும் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கும். நமக்கு பாதுகாவலாக கால பைரவர் என்றென்றும் நமக்கு துணையாக இருப்பார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காலபைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி தினத்தில் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஜனவரி மாதம் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலமான மூன்று மணியிலிருந்து நான்கு முப்பது மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய காலபைரவர் ஆலயத்தில் செய்ய வேண்டும். எந்தவித வேறமும் பேசாமல் ஒரு பூசணிக்காய், ஒரு தேங்காய், ஒரு எலுமிச்சம்பழம் இவை மூன்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். பைரவரின் சன்னதிக்கு முன்பாக பூசணிக்காயை சரிபாதையாக நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு மஞ்சள் தடவி குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இதில் நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றி சிவப்பு நிற துணியில் 27 மிளகுகளை வைத்து மூட்டையாக கட்டி திரி போல் தயார் செய்து போட்டுக்கொள்ள வேண்டும்.

தேங்காயையும் சரிபாதியாக உடைத்து அதில் நெய் ஊற்றி சாதாரண திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழத்தையும் சரிபாதியாக நறுக்கி அதிலும் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆறு தீபத்தையும் ஒரு தட்டில் வைத்து அதனுடன் நெல்லிக்கனி அல்லது பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த தீபங்களுக்கு செவ்வரளி மலர்களையும் வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது காலபைரவருக்கு முன்பாக இந்த ஆறு தீபங்களையும் ஏற்றி காலபைரவரை எட்டு முறை வலது புறமாகவும் எட்டு முறை இடது புறமாகவும் தீப ஆரத்தி காட்ட வேண்டும். அவ்வாறு தீப ஆராத்தி காட்டும் பொழுது “ஓம் ஸ்ரீம் கால பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே காட்ட வேண்டும். பிறகு இந்த தீபங்களை அப்படியே காலபைரவருக்கு முன்பாக வைத்து அந்த தீபச்சுடரொளியை பார்த்தவாறு “ஓம் ஸ்ரீம் கால பைரவாய நமஹ, ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ, ஓம் ஸ்ரீம் ஸ்வர்ண பைரவாய நமஹ” என்னும் இந்த மூன்று மந்திரத்தையும் 108 முறை கூற வேண்டும்.

இப்படி கூறுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். அந்த கஷ்டங்கள் நீங்குவதற்குரிய பண வரவும் உண்டாகும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு பிஸ்கட் பாக்கெட்டை அருகில் இருக்கக்கூடிய நாய்களுக்கு தானமாக தந்துவிட வேண்டும். நெல்லிக்கனி வைத்திருந்தால் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு தானமாக தந்து விட வேண்டும். ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்யலாம். பூசணிக்காய் தீபத்தை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற இரண்டு தீபங்களையும் ஏற்றி வைத்து வீட்டிலேயே இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:தைப்பூசம் 21 நாள் விரதம் இருக்கும் முறை

கடன் பிரச்சனைக்கு காரணமாக இருக்கக் கூடிய செவ்வாய் பகவானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று வரக்கூடிய இந்த தேய்பிறை அஷ்டமியை முழுமனதோடு காலபைரவரை வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய கடன் பிரச்சினை தீருவதற்குரிய பணவரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்