தை மூன்றாம் வெள்ளிக்கிழமை வழிபாடு.

amman
- Advertisement -

ஆடி வெள்ளியைப் போலவே, இந்த தை வெள்ளிக்கிழமையும் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். தை வெள்ளிக்கிழமை அன்று அம்பாளிடம் வைக்க கூடிய வேண்டுதல் உடனடியாக பலிக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. தை வெள்ளிக்கிழமைகளில் சில வீடுகளில் மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைத்து பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அதேபோல தான், தை வெள்ளிக்கிழமை பெண் தெய்வங்களையும் நினைத்து வழிபாடு செய்வார்கள். தை வெள்ளிக்கிழமை பின் சொல்லக்கூடிய முறைப்படி வீட்டில் அம்பாள் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீராத துன்பம் உடனடியாக தீரும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த எளிமையான ஒரு வழிபாட்டை பற்றி தான் இன்று பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

தை வெள்ளிக்கிழமை மூன்றாவது வெள்ளி வழிபாடு

இந்த வழிபாட்டை மூன்றாவது வெள்ளிக்கிழமை தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தை மாதத்தில் வரக்கூடிய எந்த வெள்ளிக்கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். நாளைய தினம் கூட தை மாத வெள்ளிக்கிழமை தான். பெண்கள் நாளைய தினம் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தம் செய்து கொள்ளவும்.

வழக்கம்போல வெள்ளிக்கிழமை என்றால் நம்முடைய வீடு சுத்தமாகத்தான் இருக்கும். பூஜை அறையை சுத்தம் செய்து அதற்கு பூக்களால் அலங்காரம் செய்து, வழக்கம் போல் விளக்குகளை எல்லாம் ஏற்றி வையுங்கள். இந்த பூஜையில் அம்பாளை நினைத்து நாம் ஏற்ற வேண்டிய தீபம் மாவிளக்கு. பச்சரிசி மாவில் கொஞ்சம் வெல்லம் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, ஏலக்காய் பொடி சேர்த்து, பிசைந்து விளக்கு போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரண்டு மாவிளக்குகள் தயார் செய்து கொள்ளுங்கள். அந்த மாவிளக்கில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு விளக்கு ஏற்றி அம்பாள் முன்பாக வைக்கவும். ஒரு தாம்பல தட்டில் வெற்றிலை அல்லது வாழை இலை வைத்து அதற்கு மேலே இந்த மாவிளக்குகளை வைத்து ஏற்ற வேண்டும். இந்த மாவிளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜையறையின் முன்பாக மண்டியிட்டு பெண்கள் வேண்டுதல் வைக்க வேண்டும்.

அதாவது இரண்டு முட்டிகளையும் கீழே வைத்தபடி, முட்டி போட்டு அம்பாளிடம் வரத்தை கேளுங்கள். உங்கள் குடும்ப பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதை அம்பாளிடம் முறையிட்டு அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சிறிது நேரம் இந்த விளக்கு பூஜை அறையில் எறியட்டும். இந்த வழிபாட்டில் சக்கரை பொங்கல் கேசரி இப்படி உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து வைக்கலாம்.

- Advertisement -

கற்பூர ஆரத்தி காண்பித்து இறுதியாக பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த மாவிளக்கை சில பேர் பிரசாதமாக சாப்பிடுவார்கள். அப்படி இல்லையென்றால் இந்த மாவிளக்கை கொண்டு போய் அப்படியே பசு மாட்டிற்கு கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் ஏற்றக்கூடிய விளக்குகளிலேயே மிக மிக சிறப்பான விளக்கு இந்த மாவிளக்கு.

அம்பாளுக்கு ரொம்ப ரொம்ப உகந்தது. அதை இந்த தை மாதம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் ஏற்றி அம்பாளை நினைவுகூர்ந்து வழிபாடு செய்தால் குடும்பத்திற்கு சுபிட்சம் கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இந்த விளக்கை ஏற்றி அம்பாளை வழிபடுவதன் மூலம் வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கடன் சுமையால் அவதிப்படுபவர்களுக்கு செல்வ வளம் பெருகும். இப்படி அத்தனை வளத்தையும் கொடுக்கக்கூடிய அம்பாளின் ஆசிர்வாதத்தை பெற மிக மிக எளிமையான வழிபாடு இது. வாய்ப்பு உள்ளவர்கள், நம்பிக்கை உள்ளவர்கள் நாளை இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -