செல்வம் பெருக தைப்பூச தீபம்

selvam peruga murugan dheepam
- Advertisement -

முருகனின் வழிபாட்டிற்கென சில தினங்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது. அது வைகாசி விசாகம் இதை முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது. அடுத்து கார்த்திகை இது அறுவராக உதித்த முருகன் சக்தியின் துணையால் ஒருவனான திருநாள் தான் இந்த கார்த்திகை. சஷ்டி இந்நாள் அசுரர்களை அழித்து, அவர்களை ஆட்கொண்ட நாள் ஐப்பசியில் வரும் சஷ்டி.

முருகன் வள்ளியை திருமணம் புரிந்த இந்த இதை தான் பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது. தை பூசம் அன்னையிடம் வேல் வாங்கி, திருக்கையில் வேல் ஏந்திய நாள் தான் தை பூசம் திருநாள் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தைப்பூச திருநாளில் முருகருக்கு எத்தனை சிறப்பு வாய்ந்ததோ அதே அளவு சிறப்பு வாய்ந்தது அவர் வைத்திருக்கும் வேலுக்கும் உண்டு.

- Advertisement -

இந்த தைப்பூசம் வரும் நாளானது பூசம் நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து தான் இருக்கும். அதே போல் இந்த வருடமும் தைப்பூசமானது 25.1.2024 அன்று வியாழக்கிழமை வந்திருக்கிறது அந்த நாளில் பௌர்ணமி திதி இருந்தாலும் பூசம் நட்சத்திரமானது காலை 9:14 க்கு தான் துவங்குகிறது. ஆகையால் இந்த தைப்பூச வழிபாட்டை காலை 9.20 மணிக்கு மேல் துவங்குவது சிறந்தது. அதே போல் மாலையில் 6.20 முதல் 7.30 மமணி வரை இந்த வழிபாட்டை செய்யலாம். அப்போது இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்வம் பெருக தைப்பூச தீப வழிபாடு
இந்த வழிபாட்டில் முக்கியமானது முருகனுக்கு நாம் சாற்றக் கூடிய மலர் தான். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மலரும் பிடித்ததாகவும் உகந்ததாகவும் இருக்கும். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு உகந்த மலராக செவ்வரளி உள்ளது. இந்த செவ்வரளியை கொண்டு தான் நாளை தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் முருகர் படம் அல்லது வேல் இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். தைப்பூச திருநாள் என்றாலே வேலிற்கு தனி வழிபாடு உண்டு. ஆகையால் இருப்பின் நிச்சயமாக அதை பூஜையில் வைத்து வழிபட வேண்டும். ஒரு சிறிய தட்டில் செவ்வரளி மலர்களை பரப்பி விடுங்கள். அதன் மேல் அகல் வைத்து எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். நெய்வேதியமாக சர்க்கரை பொங்கல், பாயாசம் என ஏதேனும் ஒரு இனிப்பை வைத்து விடுங்கள்.

இந்த தீபத்தை ஏற்றி விட்டு தீபம் அமர்ந்து உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பணத்தடைகள் நீங்கி, கடன் தொல்லைகள் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றும் மறக்காமல் வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வேண்டுதலுடன் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் என இவற்றில் ஏதேனும் ஒன்றை நிச்சயமாக பாராயணம் செய்ய வேண்டும். இந்த வழிபாடு முடிந்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி நெய்வேத்தியத்தை உங்கள் வீட்டில் அருகில் உள்ள ஒருவருக்கு கொடுத்து விட்டு அதன் பிறகு நீங்கள் உண்ணுங்கள். இது அன்றைய தினம் நீங்கள் தானம் செய்த பலனை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர குபேர பௌர்ணமி தீபம்

நாளைய தினம் முருகருக்கு பிடித்த இந்த மலர் கொண்டு இப்படி தீபம் ஏற்றி இப்படி வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஏற்றங்களை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் முருகனை மனதார நம்பி இந்த தீப வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -