நாளை தை பௌர்ணமி – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்

thai-pournami
- Advertisement -

தை மாதம் என்பது சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியில் பிரவேசிக்கும் மாதமாகும். தமிழர்களை பொறுத்தவரை நெல் அறுவடை மாதம் ஆகும். அனைத்து உயிர்களுக்கும் உணவை தரும் உழவர்களின் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானை போற்றும் வகையில் இம்மாதத்தில் தான் “பொங்கல் விழா” கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் பல ஆன்மீக சிறப்பு தினங்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் “தை பௌர்ணமி”. இந்த தை மாதத்தில் வரும் தை பௌர்ணமி தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தை பௌர்ணமி தினம் பொதுவாக தை மாதத்தின் பூச நட்சத்திரம் தினத்தன்றோ அல்லது மிக அரிதாக அதற்கு முந்தைய தினமோ வருகிறது. இந்த தை பௌர்ணமி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் கேசரி செய்து சிவனுக்கு நைவேத்தியம் செய்து, திட உணவு ஏதும் உட்கொள்ளாமல் பௌர்ணமி விரதம் இருந்து சிவ மந்திர ஜெபம், சிவ தியானம் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும்.

- Advertisement -

மாலையில் மீண்டும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கும், அம்பாளுக்கும் மலர்களை சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவபார்வதியை வழிபட்டதும் கோயிலில் இருந்தவாறே வானில் தெரியும் பௌர்ணமி சந்திரனை தரிசித்து வழிபட வேண்டும். பின்பு கோயிலில் விளக்கெண்ணெய் அல்லது நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு கோயிலை வலம் வந்து, வீடு திரும்ப வேண்டும்.

siva-parvathi

வீடு திரும்பியதும் பூஜையறையில் சிவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட கேசரி வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரசாதமாக தந்து, நீங்களும் சாப்பிட்டு பௌர்ணமி விரதம் முடித்து வழக்கமான ஆகாரங்களை சாப்பிடலாம். இந்த தை பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளும் நபர்களின் ஆயுள் விருத்தியாகும். நீங்கள் விரும்புகிற காரியங்கள் நடக்க தொடங்கும். உடல் மற்றும் மனநலன் சிறப்பாக இருக்கும். துரதிர்ஷ்டங்கள் விலகும். சிறந்த நபர்களின் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உச்சிநாதர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thai pournami in Tamil. It is also called as Thai matham sirappu in Tamil or Thai masam in Tamil or Pournami tithi in Tamil or Pournami valipadu in Tamil.

- Advertisement -