நீங்கள் வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவிக்க நாளை(28/1/2021) ‘தை பௌர்ணமி’ அன்று இதை மட்டும் செய்தால் போதுமே!

pournami-murugan
- Advertisement -

தை மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய பூச நட்சத்திரம் தான் தைப்பூசம் என்று கோலாகலமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே பவுர்ணமி தினத்தில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடைபெறும். இன்று இருக்கும் பலரும் டயட் என்று கடைபிடிக்கும் பேஷன் உலகம், அன்றே நம் முன்னோர்கள் விரதம் என்று கூறி பக்தியுடன் கூடிய ஆரோக்கியத்தையும் பேணிக் காத்தனர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் அறிவு பூர்வமான சிந்தனை இருப்பது வியப்பிற்குரியது.

pournami

ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விரதம் கடைப்பிடித்து உடலையும், மனதையும் தூய்மைப்படுத்திக் கொண்டனர். அவ்வகையில் தை மாதத்தில் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. இந்த நன்னாளில் இந்த ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் பிரச்சனைகளே வராமல் தடுக்க முடியும். அது என்ன? என்பதை இப்பகுதியின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பொதுவாக பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பிரபஞ்சத்தின் சக்தி அதிகரித்து காணப்படும். இது அறிவியல் ரீதியாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள உண்மை தான். இந்த பிரபஞ்சத்தின் சக்தியில் விரதம் இருப்பது, நல்ல விஷயங்களை செய்வது, பிறருக்கு உதவுவது, முன்னோர்களை வழிபடுவது, குலதெய்வ வழிபாடு செய்வது, திருஷ்டி கழிப்பது, பரிகாரங்கள் செய்வது, பூஜை, புனஸ்காரங்கள் மேற்கொள்வது, கிரிவலம் வருவது போன்ற விஷயங்கள் அதிக பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

chitra pournami sivan

தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த பௌர்ணமி அன்று வீட்டில் இருப்பவர்களும் வெளியில் வந்து நிலாச் சோறு சாப்பிட உடலும், மனமும் வலுபெறும். எப்பொழுதும் நிலாவிற்கு கீழ் அமர்ந்து சாப்பிடுவதை விட, பௌர்ணமியில் நிலாச் சோறு சாப்பிடுவது அதீத பலன்களைக் கொடுக்க வல்லது. மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.

- Advertisement -

பௌர்ணமி தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதும் வாழ்க்கையில் வரும் இன்னல்களை நீக்கும். தை பவுர்ணமி முழுவதும் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட சகல செல்வ வளங்களும் கிடைக்கும். மாலை வேளையில் முருகனை தரிசனம் செய்த பின்னர் வெளியில் வரும் பொழுது சந்திர தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் உங்களால் முடிந்த அளவிற்கு யாராவது ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தால் வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவிக்கலாம். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தை பௌர்ணமி தினத்தை தவற விட்டு விடாதீர்கள்.

pournami

சுபகாரியத் தடை இருப்பவர்கள், மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ள விரும்புபவர்கள், தை பௌர்ணமி அன்று குருபகவான் வழிபாட்டை மேற்கொள்ளலாம். நவக்கிரக சன்னிதியில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற தானியமாக இருக்கும் கொண்டைக் கடலையை தானம் செய்து வர, மனதில் நினைத்து இருப்பவர்களையே திருமணம் புரிய முடியும். அதனுடன் முருகன் மற்றும் அவருடைய வேலை வணங்கி அபிஷேகம் செய்தால் உங்களுடைய வேண்டுதல்கள் அத்தனையும் அப்படியே பலிக்கும்.

இதையும் படிக்கலாமே
நிலை வாசலில் இந்த பொருளை மட்டும் இப்படி வைத்து பாருங்கள்! உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்தும் காற்றோடு காற்றாக கரைந்து போய்க்கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -