நிலை வாசலில் இந்த பொருளை மட்டும் இப்படி வைத்து பாருங்கள்! உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்தும் காற்றோடு காற்றாக கரைந்து போய்க்கொண்டே இருக்கும்.

amman-salt

வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டம் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடாதா என்று தான் இன்றளவும் நாம் வேண்டுதலை இறைவனிடம் வைத்து கொண்டிருக்கின்றோம். இந்த கஷ்டம் காற்றோடு காற்றாக கரைவதற்கு ஒரு சுலபமான பரிகார வழிபாட்டு முறை உள்ளது. அந்த வழிபாட்டு முறையை நம்முடைய வீட்டில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய பதிவுதான் இது. உங்கள் வீட்டில் தீராத கஷ்டம், மன உளைச்சல், சண்டை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க வில்லை எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் சரி, சிரமம் பார்க்காமல் இந்த ஒரு வழிபாட்டு முறையை மட்டும் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கூடிய விரைவில் கிடைக்கும்.

sad-lakshmi

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் செய்து வைத்தாலே போதும். அடுத்த வெள்ளிக்கிழமை வரும் வரை உங்களது வீட்டை இந்த பரிகாரம் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கு தேவையான பொருட்கள் ஒரு மண் அகல் விளக்கு. சுத்தமான கல் உப்பு சிறிதளவு மஞ்சள், சிறிதளவு குங்குமம் அவ்வளவுதான். பூ இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கட்டாயம் வெள்ளிக்கிழமை என்றால் உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து நில வாசற்படிக்கு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, அலங்காரம் செய்திருப்பீர்கள். கூடவே ஒரு சுலபமான வழிபாட்டையும் செய்துவிடுங்கள். சிறிய மண் அகல்விளக்கு, அது பழைய மண் அகல் விளக்காக இருந்தாலும் பரவாயில்லை, சுத்தமாக கழுவித் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோபுரமாக கல்லுப்பு கொட்ட வேண்டும். அந்த கல் உப்பின் மேல் ஒரு சிட்டிகை மஞ்சளை பரப்பி, அதன்மேல் குங்குமப் பொட்டை வட்டமாக அழகாக வைத்து விடுங்கள்.

Agal-Vilakku

இதை அப்படியே எடுத்து பத்திரமாக நில வாசற்படியில் வைத்து விடவேண்டும். உங்களுடைய வீட்டில் குழந்தைகள் இருக்கின்றது. விளையாடும்போது தட்டி விட்டு விடும் என்றால், நில வாசலுக்கு வெளிப்பக்கத்தில் ஒரு ஸ்டாண்ட் போல அடித்து கூட, அதன் மேலே இதை வைத்துக் கொள்ளலாம். சில வீடுகளில் விளக்கு ஏற்றும் மாடம் இருக்கும் அதன் மேலும் இதை வைக்கலாம். உங்கள் வீட்டில் பூ இருந்தால் இந்த அகல் பக்கத்தில் அந்த பூவை வைத்துக் கொள்ளுங்கள்

- Advertisement -

இப்படி கல்லுப்பைக் நில வாசலில் வைக்கும் போது, உங்கள் வீட்டிற்குள் கஷ்டம் வரக்கூடாது. கஷ்டம் அப்படியே நுழைந்தாலும், அது வந்த வழி தெரியாமல் வெளியே சென்று விட வேண்டும் என்ற வேண்டுதலை குலதெய்வத்திடம், மகாலட்சுமியிடமும் வேண்டிக்கொள்ளுங்கள்.

salt cash

இந்த அகல் விளக்கில் இருக்கும் உப்பு, எப்படி நில வாசலில் காற்றில் கரைந்து கொண்டே இருக்கின்றதோ, அதேபோல் உங்களுக்கு வரக்கூடிய கஷ்டமும் காற்றில் கரைந்து கொண்டே போகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து விட்டு, அடுத்து வரக்கூடிய  வியாழக்கிழமை அந்த கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

உங்களுக்கு இந்த பரிகாரத்தின் மனத் திருப்தி ஏற்பட்டால், மீண்டும் வெள்ளிக்கிழமை இதேபோல் அகலில் கல்லுப்பு நிரப்பி தயார் செய்து, நிலை வாசற் படியில் தொடர்ந்து வைத்து வரலாம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முழு நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வீட்டில் நல்ல மாற்றத்தை உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.