- Advertisement -

தை பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

நம்முடைய மனதில் எழக்கூடிய ஒவ்வொரு எண்ணங்களும் தான் நம்முடைய கஷ்டத்திற்கும் சந்தோஷத்திற்கும் காரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட மனதை செம்மைப்படுத்த வேண்டும் என்றால் சந்திர பகவானின் அருள் என்பது வேண்டும். சந்திர பகவானின் பரிபூரணமான சக்தி கிடைக்கக்கூடிய நாளாக தான் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி திகழ்கிறது. இருப்பினும் தை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதீத சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட அதீத சக்தி வாய்ந்த தைப்பொவுர்ணமி நாளன்று சந்திர பகவானை எப்படி வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தை பௌர்ணமி வழிபாடு

சந்திர பகவானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய மனம் ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும் என்றாலும் சந்திர பகவானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளை பெற முடியும். மேலும் விநாயகப் பெருமானின் அருளையும் பெற முடியும். அதோடு மட்டுமல்லாமல் சந்திர பகவானின் சகோதரியாக திகழக்கூடிய மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும். இப்படி இவர்கள் அனைவரின் அருளையும் பெறக்கூடியதாக தான் இந்த ஒரு எளிமையான வழிபாடு திகழ்கிறது.

- Advertisement -

தை பௌர்ணமி என்பது பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இரவு 7:51 மணிக்கு தொடங்குகிறது இவ்வாறு தொடங்கிய இந்த பௌர்ணமி திதி என்பது பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி இரவு 8:12க்கு நிறைவடைகிறது. அதனால் இரவு பௌர்ணமி என்பதை நாம் செவ்வாய்க்கிழமை அன்று தான் சொல்ல முடியும். அதனால் முழு நிலவான பௌர்ணமியை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாகவும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தான் திகழ்கிறது. பௌர்ணமி திதி ஆரம்பித்த பிறகு இரவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.

இந்த வழிபாட்டிற்கு ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்தே பன்னீர் ஊற்றி சுத்தம் செய்து அதை ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு சிறிது குங்குமம், சிறிது நெய், குங்குமப்பூ இருக்கும் பட்சத்தில் அதையும் சேர்த்து நன்றாக குழைத்து உங்களுடைய மோதிர விரலால் அதைத் தொட்டு வெற்றிலையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும்.

- Advertisement -

ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்த பிறகு இந்த வெற்றிலையை அந்த சிறிய தட்டி மேல் வைத்து விடுங்கள். இந்த தட்டு பித்தளை, செம்பு போன்ற தட்டாக இருந்தால் நல்லது அல்லது கண்ணாடி தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக இந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் வெள்ளி நாணயம், தங்க நாணயம் இருக்கும் பட்சத்தில் அதைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பு நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொண்டு சந்திர பகவான் நன்றாக தெரியும்படி இருக்கக்கூடிய இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை கீழே வைத்துக் கொண்டு சந்திர பகவானை முழுமனதோடு வழிபாடு செய்து அந்த தண்ணீரை அப்படியே கீழே இருக்கும் பாத்திரத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஊற்ற வேண்டும். சூரிய பகவானுக்கு வழிபாடு செய்யும்பொழுது தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்வோம் அல்லவா? அதே போல் தான் சந்திர பகவானுக்கும் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு சந்திர பகவானை கீழே வைத்திருக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினோம் அல்லவா? அதில் சந்திர பகவான் தெரியும்படி சந்திர பகவானை பார்த்து முதலில் ஊதுபத்தி தூபத்தையும் சாம்பிராணி தூபத்தையும் காட்ட வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இப்படி காட்டி முடித்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் அந்த வெற்றிலை இருக்கிறது அல்லவா? அந்த தட்டை அப்படியே எடுத்து சந்திர பகவானின் ஒளி படும்படி வைக்க வேண்டும்.

அவ்வளவுதான் நாம் திரும்ப வீட்டிற்குள் வந்துவிடலாம். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு நாம் சந்திர பகவானின் ஒளிபடும்படி வைத்திருந்த அந்த வெற்றிலை ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அந்த பாத்திரத்தில் தண்ணீர் இருந்ததல்லவா? அதை எடுத்து செடிகளில் ஊற்றி விட வேண்டும். எப்பொழுதும் போல் வழிபாடு செய்து விட்டு அந்த நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். வெற்றிலையை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:பண வசியம் ஏற்பட தை பௌர்ணமி பரிகாரம்

இப்படி நாம் தை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதிலும் குறிப்பாக பணம் தொடர்பான முன்னேற்றத்திற்கு எந்தவித தடைகளுமே இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்