வருகின்ற தை மாதம் 16ஆம் தேதி, தை அமாவாசை. ஆங்கில தேதியின்படி 29-1-2025 புதன்கிழமை அன்று இந்த அமாவாசை திதி வரவிருக்கிறது. தாய் தந்தை இல்லாதவர்கள், மறைந்த முன்னோர்களுக்கு இந்த அமாவாசை திதியில், விசேஷமாக திதி தர்ப்பண காரியங்களை செய்வார்கள். இது வழக்கம். நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
உங்களுக்கு தாய் தந்தை இருக்கிறார்கள். நீங்கள் இந்த தை அமாவாசையில் என்ன வழிபாடு செய்தால், உங்களுடைய வாழ்வில் நல்லது நடக்கும். வீட்டில் தடைபட்டு இருக்கும் சுப காரியங்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் தை அமாவாசையில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
தை அமாவாசை சிவன் வழிபாடு
அமாவாசை திதி அன்று இரண்டு வழிபாடு மிகச் சிறப்பான வழிபாடு. அம்மன் வழிபாடு சிறப்பான வழிபாடு. சிவன் வழிபாடு மிக மிக சிறப்பான வழிபாடு. இந்த இரண்டு வழிபாட்டையும் அமாவாசை தினத்தில் செய்வது நம்முடைய வாழ்வில் நல்ல பலன்களை கொடுக்கும். வீட்டு பக்கத்தில் அம்பாள் கோவில் இருந்தால் மாலை நேரத்தில் சென்று அந்த அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து, எலுமிச்சை மாலை போடலாம், அல்லது ஒரு எலுமிச்சம் பழத்தை அம்பாள் பாதத்தில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்து நிலை வாசலில் கட்டினால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேறிவிடும்.
வீட்டிற்குள் துர் சக்திகள் நுழையாமலும் இருக்கும். அல்லது உங்களால் முடிந்த பொருட்களை அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம், வேண்டுதலை வைக்கலாம். அந்த அம்மன் கோவிலை அமாவாசை திதியில் 108 முறை சுற்றி வந்தால் நீங்கள் வேண்டியது உடனடியாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதே போல தான் சிவன் கோவிலில் வழிபாடு செய்வது சிறப்பு. 2 பெரிய மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு, சிவபெருமானை மனதார நினைத்து அந்த கோவிலை 108 முறை வலம் வந்து வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக செல்வ செழிப்போடு வாழும் என்பது நம்பிக்கை. தாய் தந்தையர்கள் இருப்பவர்கள் இந்த வழிபாட்டை தை அமாவாசை திதியில் செய்யுங்கள்.
உங்களுக்கு தாய் தந்தை இல்லை. முன்னோர்கள் வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு, இந்த வழிபாட்டை செய்யலாமா என்று கேட்டால், நிச்சயமாக செய்யலாம். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. அதேபோல சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் மட்டும் தான் இருப்பார்கள். பெண் பிள்ளைகளால், மறைந்த தாய் தந்தையருக்கு முறைப்படி திதி தர்ப்பண காரியங்களை செய்ய முடியாது.
இதையும் படிக்கலாமே: 27-01-2025 பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய நரசிம்மர் வழிபாடு
அப்படி இருந்தாலும் நீங்கள் அவர்களை நினைத்து சிவன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தாலும், உங்களுக்கான பலன் கிடைக்கும். நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றுங்கள். நல்லதே நடக்கும். அமாவாசை திதியில் மறைந்த முன்னோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். குடும்பம் சுபிட்சம் பெறும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.