- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதை மாத தேய்பிறை பஞ்சமி திதி பரிகாரம்

தை மாத தேய்பிறை பஞ்சமி திதி பரிகாரம்

- Advertisement -

எதிர்மறை சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவள் வாராஹி. அந்த வாராஹி அன்னைக்கு உரிய திதி பஞ்சமி திதி. இன்றைய தினம் 18-01-2025 தை மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி ஆனது சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் வாராகி அம்மனையை நினைத்து நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் நமக்கு பல மடங்கு பலனை கொடுக்கும்.

அந்த வகையில் உங்களுடைய வீட்டில், கண் திருஷ்டியால் பிரச்சனையா அல்லது ஏதேனும் கெட்ட சக்தியால் பிரச்சனையா, எதிரிகள் மூலம் பிரச்சனையா, ஏவல் பில்லி சூனியத்தால் உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களும், உங்கள் குடும்பமும் பாதிக்கப்பட்டு இருக்கிறதா, தவறாமல் இந்த வழிபாட்டை இன்றைய தினம் செய்து விடுங்கள்.

- Advertisement -

நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியானது தெரிந்து ஓடிவிடும். உடம்பை பிடித்து ஆட்டிப்படைக்கும் கண் திருஷ்டியும், கெட்டது சக்தியும் தலை தெரிக்க ஓடிவிடும். இன்றைய தினம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

தை மாத தேய்பிறை பஞ்சமி திதி பரிகாரம்

உங்க வீட்டு பக்கத்தில் வாராஹி அன்னையின் கோவில் இருக்கிறதா என்று முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். நாளை வாராகி சன்னிதானம் இருக்கும் கோவிலில் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கோவிலுக்கு வாராகி அன்னைக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதை எல்லாம் வாங்கிச் செல்லலாம். கிழங்கு வகைகளை அவித்து பிரசாதமாக எடுத்துச் செல்லலாம், செவ்வரளி பூக்கள், செம்பருத்திப் பூக்கள், பானகம் இப்படி எது வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லலாம்.

- Advertisement -

தேங்காய், பூ பழம் வெற்றிலை பாக்கு என்று பூஜை தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துச் செல்லுங்கள். கூடவே ஒரே ஒரு எலுமிச்சம்பழம் வாங்கி வாராஹி அன்னையின் மடியில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, அந்த எலுமிச்சம் பழத்தை திரும்பவும் வீட்டிற்கு வாங்கி வந்து, இரண்டாக அறுத்து, வீட்டின் நிலை வாசலில் இரண்டு பக்கமும் சிவப்பு நிற குங்குமத்தை தடவி இந்த எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும்.

இப்படி வைக்கும் போது, “ஓம் வாராஹி அம்மனே போற்றி போற்றி” என்று வாய்விட்டு 9 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த எலுமிச்சம் பழத்தை வைத்தாலே வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியானது வெளியே ஓடிவிடும். ஐந்து நாட்கள் கழித்து வாசலில் வைத்த எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு கவரில் போட்டு அப்படியே வீட்டிற்கு வெளியே குப்பை தொட்டியில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

உடம்பில் ஏதோ தீர்க்க முடியாத சிக்கல்கள் இருக்கிறது. கண் திருஷ்டியால் பிரச்சனை, அல்லது கெட்ட சக்தி புகுந்து கொண்டு ஆட்டி படைக்கிறது என்றால் வாங்கி வந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி இரண்டாக நறுக்கி குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விடுங்கள். உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம் பீடை கெட்ட சக்தி உடனடியாக விலகி விடும். இது முதல் பரிகாரம்.

இரண்டாவது உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்டதும் நுழையாமல் இருக்க வேண்டும். வீட்டிற்கு உள்ளே இருக்கும் கெடுதல் வெளியே தெரித்து ஓடி விட வேண்டும் என்றால் என்ன செய்வது.

கருவேலங்குச்சி, வன்னி மர குச்சி, ஒரு சின்ன படிகார கல். இந்த மூன்று பொருட்களும் பரிகாரத்திற்கு தேவை. ஒரு மஞ்சள் நிற துணியில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை கையில் வைத்துக்கொண்டு, குலதெய்வமும் வாராஹி அன்னையும் எங்கள் நிலை வாசலில் காவல் தெய்வமாக நிற்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து, இந்த முடிச்சை நாளைய தினம், நிலை வாசலில் கட்டுங்கள்.

நிலை வாசலில் கட்டும் போது வாராகி அம்மனே துணை என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே நிலை வாசலில் இந்த முடிச்சை கட்டி தொங்க விட்டால், ஒரு வருடத்திற்கு இந்த முடிச்சு உங்கள் வீட்டிற்கு காவல் தெய்வமாக நிற்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஒரு வருடம் கழித்துதான் உள்ளே இருக்கும் பழைய பொருட்களை எடுத்து மாற்றி மீண்டும் புது பொருட்களை கட்டலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் செல்வ வளம் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தை மாதத்தில் இந்த முறையில் வாசலில் கோலம் போட்டால் போதும் மகாலட்சுமி தாயார் வீடு தேடி வந்து அருள் புரிவார்

இந்த எளிமையான பரிகாரத்தை, சனிக்கிழமையுடன் சேர்ந்து வரும் தேய்பிறை பஞ்சமி திதியில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டில் சந்தோஷம் மட்டும்தான் இருக்கும். அதற்கு வாராகித் தாய் பொறுப்பு. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். கருவேலங்குச்சி, வன்னி மர குச்சி, பரிகார கல் இது மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் சொல்லி கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் பரிகாரத்தை செய்பவர்களுக்கு நல்லதே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்