சுட சுட இட்லிக்கு இந்த தக்காளி குழம்பை காரசாரமாக தொட்டு சாப்பிட்டால், நிச்சயமா 10 இட்லி கூட பத்தாது. நீங்களும் உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க!

thakkali-kuzambu
- Advertisement -

தக்காளியை வைத்து ஒரு குழம்பு. பருப்பு, தேங்காய் எதுவுமே சேர்க்க போவது கிடையாது. வித்தியாசமான முறையில், வித்தியாசமான சுவையில் சட்டென 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சைட் டிஷைதான் இன்று, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தக்காளி குழம்பு ஊத்தி, சுட சுட இட்லியை அப்படியே சாப்பிட்டீங்கனா 10 இட்லி உள்ளே இறங்குவது உங்களுக்கு தெரியாது. அந்த குழம்பை எப்படி வைக்கிறதுன்னு நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா? வாங்க சீக்கிரமா! அந்த ரெசிபியை இப்பவே சுலபமா தெரிஞ்சுக்கலாம்.

thakkali-kuzambu2

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், போட்டு சிவக்க விட வேண்டும். அதன் பின் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 3 போட்டு வெங்காயம் பச்சை வாடை போகும் வரை வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக பூண்டு – 6 பல் மிகவும் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 3 கீனியது, கருவேப்பிலை – 1 கொத்து, நன்றாகப் பழுத்த தக்காளி பொடியாக நறுக்கியது – 3 இவை அனைத்தையும் போட்டு இறுதியாக குழம்பு தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கண்ணுக்கு தெரியாத அளவிற்கு தொக்கு பதத்தில் வதக்கி விடுங்கள்.

tomato

தக்காளி வதங்கிய பின்பு, இறுதியாக தனி மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து நன்றாக சுட வைத்த தண்ணீரை 2 டம்ளர் அளவு கடாயில் ஊற்றி நன்றாக குழம்பை கலந்து, நான்கு கொதி வர விடுங்கள். அதாவது மிளகாய் தூள் பச்சை வாடை முழுமையாக நீங்க வேண்டும்.

- Advertisement -

இறுதியாக இந்த இடத்தில் நாம் சேர்க்கக் கூடிய ஒரு பொருள். சுவையைக் கூட்ட கூடிய ஒரு பொருள், 1 ஸ்பூன் அரிசி மாவு. சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக (3 டேபிள் ஸ்பூன் அழகு தண்ணீர்) தண்ணீர் விட்டு, 1 ஸ்பூன் அளவு அரிசி மாவை போட்டு கட்டி படாமல் கலக்கி, குழம்பில் ஊற்றி இரண்டு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடுங்கள்.

thakkali-kuzambu1

குழம்பு இலேசாக திக்காக மாறிவிடும். சுவையாகவும் இருக்கும். இட்லிக்கு மட்டுமல்ல தோசை சப்பாத்தி வெள்ளை சாப்பாடு எல்லாவற்றிற்கும் இந்த குழம்பு சூப்பர் சைட் டிஷ் ஆக இருக்கும். மொத்தமாக செய்ய பத்து நிமிஷம் கூட ஆகாது. உங்களுக்கு இந்த குழம்பு பிடிச்சிருக்கா? உங்க வீட்ல இன்னைக்கு நைட் ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
1 டம்ளர் ரேஷன் அரிசி இருந்தால் உங்கள் செடிகள் அசர வைக்கும் அசூர வளர்ச்சியை அடையும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -