வீட்ல சமைக்க எதுவுமே இல்லையா கவலையை விடுங்கள். ரெண்டே நிமிஷத்துல இந்த தக்காளி மோர் குழம்பு செஞ்சு பாருங்க. சுட சுட சாதத்தோடு இந்த குழம்பு இருந்தா வெறும் ஊறுகாய் இருந்தா கூட தட்டு சோறு காலியாயிடும்.

Thakkali moor kuzhambhu
- Advertisement -

வீட்டில் எப்பொழுதும் வித விதமாக சமைத்துக் கொண்டே இருக்க முடியாது. என்றாவது ஒரு நாள் ஏதாவது சாதாரணமாக செய்யலாம் என தோன்றுவதுண்டு அல்லது வீட்டில் எதுவும் காய்கறி இல்லாத சமயத்திலும் இது போல சுலபமான தக்காளி மோர் குழம்பு செஞ்சு வேலையை முடிச்சிடலாம். ரொம்ப சிம்பிளா செய்யும் இந்த குழம்பு சாப்பிட ரொம்பவே ருசியா இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவு இந்த தக்காளி மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தயிர் ஒரு கப் தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் -10, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் -2, கடுகு -1 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன் கருவேப்பிலை கொத்தமல்லி ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை

இந்த மோர் குழம்பு செய்வதற்கு வெங்காயம் தக்காளி இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளுங்கள் அதே போல் தயிரை கட்டிகள் இல்லாமல் மத்து வைத்து கடைந்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்து சிவந்ததும் பெருங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்த பின் வெங்காயத்தை பச்சை மிளகாய் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் பச்சை மிளகாய் இவையெல்லாம் வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்த பின் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி பாதி அளவு மட்டும் வழங்கினால் போதும் அதன் பிறகு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்த தயிரை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள் தயிர் சேர்த்த பிறகு ஒரு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பையும் சேர்த்த பிறகு ஒரு முறை நன்றாக கலந்து குழம்பு லேசாக நுரைத்து வரும் போது கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் சுவையான தக்காளி மோர் குழம்பு தயாராகி விட்டது. வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லாத சமயத்தில் அல்லது அவசரமாக ஏதேனும் ஒரு சமையலை செய்ய வேண்டும் என்றால் இதை செய்துவிடலாம் இத்துடன் சாதம் வைத்து ஊருக்கு அப்பளம் உருளைக்கிழங்கு வறுவல் எப்படி ஏதாவது ஒரு சைட் டிஷ் உடன் வைத்துப் பார்த்தால் அருமையான சாப்பாடு ரெடி.

- Advertisement -