எண்ணெய் தேய்ப்பது போல இந்த டையை தலையில் தேய்த்தால், வெள்ளை முடி 5 நிமிடத்தில் கருப்பாக மாறிவிடும். இந்த டை தலைபாரம் சளி தொந்தரவை கொடுக்காது.

hair3
- Advertisement -

தலைமுடியில் இருக்கக்கூடிய வெள்ளை முடி அனைத்தும் கருப்பு முடியாக மாற வேண்டும். தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டும். குறிப்பாக ஹேர்டை போடுவதன் மூலம் தலைபாரம் சளி தொந்தரவு இருக்கக் கூடாது. பக்க விளைவுகளும் ஏற்படக்கூடாது என்றால் நம்முடைய வீட்டிலேயே சுலபமான முறையில் ஹேர் டை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஹேர்டை நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடமானாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். வாங்க குறிப்பை பார்க்கலாம்.

முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீல நிற சங்குப்பூ 30, செம்பருத்தி பூ 30, தண்ணீர் 3/4 கப், ஊற்றி காபித்தூள் – 1 ஸ்பூன், அவுரி இலை பொடி – 1/2 ஸ்பூன் போட்டு, எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு அடுப்பில் வைத்து 5 லிருந்து 7 நிமிடங்கள் போல நன்றாக கொதிக்க வைத்தால், சூப்பரான ஒரு மூலிகை தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும். அடுப்பை அணைத்துவிட்டு இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு, இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கருப்பு நிறத்தில் ஒரு தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும். இது அப்படியே இருக்கட்டும். (கொஞ்சம் திக்காக இந்த தண்ணீரை தயார் செய்ய வேண்டும் ரொம்பவும் தண்ணீர் ஊற்றி விடாதீர்கள்.)

- Advertisement -

அதன்பின்பு ஒரு சிறிய இலசான வாழைப்பூவை வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து இதையும் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். முழு வாழைப்பூ கிடைத்தாலும் வெட்டி பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது வாழைப்பூக்கு மேலே இருக்கக்கூடிய தோல் மட்டும் கிடைத்தாலும் அதை இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக மொத்தத்தில் வாழைப்பூவை அரைத்து பிழிந்த சாறு நமக்கு தேவை. இந்த சாறும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரில் நொச்சி இலை – 1 கைப்பிடி அளவு, மருதாணி இலை – 2 கைப்பிடி அளவு சேர்த்து அரைத்து வைத்திருக்கும் வாழைப்பூ சாறை இதில் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதிலிருந்து சாரை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். (நொச்சி இலை சேர்த்திருப்பதால் நமக்கு இந்த ஹேர் டை பயன்படுத்துவதன் மூலம் நிச்சயமாக தலைவலி தலைபாரம் வராது.)

- Advertisement -

முதலாவதாக காய்ச்சி வடிகட்டி வைத்திருக்கும் செம்பருத்தி பூ சங்குப்பூ தண்ணீர், அடுத்தபடியாக வாழை பூ சாறு ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்திருக்கும் மருதாணி நொச்சி இலை சாறு, இந்த இரண்டு தண்ணீரையும் ஒன்றாக கலந்து ஒரு இரும்பு கடாயில் மீண்டும் ஒருமுறை வடிகட்டி ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தால் 15 நிமிடத்திற்குள் இந்த தண்ணீர் சுண்டி தல தலவென கருப்பு டை திக்காக கிடைக்கும். அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு மூடி போட்டு இரவு முழுவதும் அப்படியே கடாயோடு மூடி போட்டு விட்டு விடுங்கள். இது நன்றாக ஆரட்டும்.

மறுநாள் காலை இந்த ஹேர் டை லிருந்து உங்களுக்கு தேவையான அளவு 1 ஸ்பூன் அல்லது 1/2 ஸ்பூன் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து அப்படியே இரண்டு கைகளில் போட்டு தேய்த்து வெள்ளை முடி இருக்க கூடிய இடத்தில் தேங்காய் எண்ணெய் போல தடவினால் 5 நிமிடத்தில் முடியில் இந்த டை காய்ந்து விடும். வெள்ளை முடி கருப்பாகவும் மாறிவிடும். (ஹார் டை பிரஷில் கூட இதை தொட்டு தலையில் அப்ளை செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம். தலைக்கு குளித்துவிட்டு தலையை காய வைத்த பின்பு இந்த ஹேர் டை அப்ளை செய்து கொள்ளுங்கள்.)

மீதம் இருக்கும் ஹேர் டை அப்படியே வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். பொடியாக உங்களுக்கு கிடைக்கும். இந்த பொடியை அப்படியே மிக்ஸி ஜாரில் அரைத்தால் நைஸ் பொடி கிடைத்துவிடும். ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாது. தேவையான அளவு பொடியை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி கரைத்து தலையில் தேங்காய் எண்ணெய் போல தடவிக் கொள்ளலாம்.

பின்குறிப்பு: இதை முதல் முறை பயன்படுத்துவீர்கள். வெள்ளை முடி கருப்பாக மாறும். மீண்டும் தலைக்கு குளிக்கும் போது இந்த கருப்பு நிறம் நீங்கதான் செய்யும். ஆனால் தொடர்ந்து இந்த ஹேர் டை பயன்படுத்தி வர நிரந்தரமாக உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். செம்பருத்தி பூ, சங்கு பூ இவைகள் எல்லாம் பூவாக உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைக்கிறது. அதை வாங்கி தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ளுங்கள். கஷ்டப்படாம ஒரு நாள் சிரமப்பட்டால் ஒரு வருடத்திற்கு நரைமுடி பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

- Advertisement -