தலையெழுத்தை மாற்றும் ஆலயம்

shivan jathagam
- Advertisement -

ஒருவர் பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறார், அவர் தொட்டது எதுவும் வெற்றியடைந்தது கிடையாது, அவருடைய வாழ்க்கையில் நன்மையே நடக்கவில்லை, அப்படியே நன்மைகள் நடந்தாலும் அதில் ஆயிரத்தெட்டு பிரச்சனை, இந்த சூழ்நிலையில் இருப்பவர்கள் “என் தலையெழுத்து அது மாறவா போகுது” என்று கூறுவார்கள். அந்த தலையெழுத்தையும் மாற்ற முடியும். ஆம் இந்த கோவிலுக்கு சென்று பாருங்கள். உங்கள் தலையெழுத்து மாறிவிடும். அந்த கோவில் பற்றிய தகவலை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தலை எழுத்து மாற வழிபாடு

ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். அந்த ஆலயத்திற்கு நாம் செல்லும் பொழுது அதனால் நமக்கு நன்மைகள் உண்டாகும். ஒரு சிலரின் ஜாதகத்தை பொருத்தவரை ஒரு சில கோவில்கள் ராசியானவையாக இருக்கும். ஒரு சில கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும். இப்படி கோவில்களுக்கு செல்வதிலேயே பல விஷயங்கள் இருக்கின்றன. எந்த ராசிக்காரர்கள் ஆக இருந்தாலும் சரி தங்களுடைய தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் போக வேண்டிய ஆலயத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த ஆலயம் காஞ்சிபுரத்தில் பெருநகர் என்னும் ஊரில் இருக்கக்கூடிய பிரம்மபுரீஸ்வரர் கோவில். அங்கு வீற்றிருக்கும் ஈஸ்வரனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்று பெயர். ஈஸ்வரனே பிரம்மனாக அவதரித்த கோவிலாக இந்த கோவில் திகழ்கிறது. ஒரு முனிவரின் தலையெழுத்தை மாற்றுவதற்காக அவர் பிரம்மனாக அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த கோவிலில் சேஷ்டா தேவி விநாயகரை நோக்கி தவம் இருக்கிறார். முப்பெரும் தேவிகளின் தலைவியாக திகழக்கூடிய சேஷ்டா தேவி விநாயகரை நினைத்து தவம் இருக்கும் ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. வேறு எங்கும் நாம் சேஷா தேவியை பார்க்க முடியாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்த அளவிற்கு எழுதிய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். கம்ப்யூட்டர் ஜாதகம் வேண்டாம். எப்பொழுது எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ராசி இருக்கும். ராசிக்குரிய நாதர் இருப்பார். அவருக்குரிய கிழமைகள் இருக்கும். அந்த கிழமைகளில் போக வேண்டும்.

- Advertisement -

அதாவது சுக்கிரனின் அம்சம் பொருந்திய ராசிகள் வெள்ளிக்கிழமையும், சூரியனின் அம்சம் பொருந்திய ராசிகள் ஞாயிற்றுக்கிழமையும், குருவின் அம்சம் பொருந்திய ராசிகள் வியாழக்கிழமையும், சனியின் அம்சம் கொண்ட ராசிகள் சனிக்கிழமை, புதனின் அம்சம் கொண்ட ராசிகள் புதன்கிழமையும், செவ்வாயின் அம்சம் கொண்ட ராசிகள் செவ்வாய்க்கிழமையும், திங்களின் அம்சம் கொண்ட ராசிகள் திங்கட்கிழமையும் செல்ல வேண்டும்.

அப்படி செல்லும் பொழுது ஜாதகத்தை எடுத்துச் செல்வது போலவே மல்லிகை, முல்லை, பன்னீர் ரோஜா இந்த மூன்று பூக்களையும் உதிரிப்பூக்களாக உங்களால் இயன்ற அளவு வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கக் கூடிய பிரம்மபுரீஸ்வரர் பாதங்களில் உங்களுடைய ஜாதகத்தை வைத்து இந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து மூன்று வாரங்களோ, மூன்று மாதங்களோ நீங்கள் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்யும் பொழுது உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கெடுதல் விளைவிக்க கூடிய கிரகங்களும் நன்மை தரும் கிரகமாக மாறிவிடும். அதனால் உங்கள் தலையெழுத்தும் சீராகிவிடும்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம்

சிவனே பிரம்மனாக அவதரித்த இந்த கோவிலுக்கு சென்று சிவபெருமானை முழு மனதுடன் வழிபடுவதன் மூலம் நம்முடைய தலையெழுத்து மாறும் என்னும் தகவலை கூறியவாறு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -