நமது தலை எழுத்து மாற இதை செய்தால் போதும் – வீடியோ

sivan

இன்றைய அவசர யுகத்தில் நாம் நிம்மதியான வாழ்க்கை வாழ, நம் எல்லோருக்கும் பணம் அவசியம். ஆனால் சிலருக்கு, அவர்கள் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அவர்களின் பொருளாதார நிலை உயராது. இதற்கு காரணம் நமது தலை எழுத்து தான் என்று பலரும் நம்புவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் பெறுவதற்கான வழிமுறைகளை இக்காணொளியில் காண்போம்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதில் கூறப்படுவது போல் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலிருக்கும் பிரம்மதேவர் கோவிலுக்குச் சென்று, நம் மனதில் என்னென்ன கோரிக்கைகள் உள்ளதோ, அவை அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு, பிரம்மதேவர் திருவுருவத்தின் முன் திடமான நம்பிக்கையோடு வழிபாடு செய்தால் நம் விதியை நல்ல விதமாக மாற்றிக்கொள்ளலாம்.

பழங்காலத்தில் மன்னர்கள் எப்போதும் செல்வந்தர்களாக இருக்க அக்கால முனிவர்களால் அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட பூஜை முறை தான் “அஷ்டஐஸ்வர்யேஸ்வர சித்தி” பூஜை முறை. பலகாலமாக மிகவும் ரகசியமாக கற்பிக்கப்பட்ட இந்த பூஜை முறையை, இன்றைய கால கட்டத்தில் பொது மக்கள் அனைவரும் செய்து, அவர்களின் வாழ்வில் மிகுந்த செல்வத்தை பெற்று இன்பமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் எல்லோருக்கும் கற்பிக்க படுகிறது. அஷ்டஐஸ்வர்யேஸ்வர சித்தி பற்றி அறிந்தவர்களால் எளிதில் அணைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும் என்பது நம்பிக்கை. அதற்கு சில மந்திரங்களை ஒரு மண்டலா காலம் கூறினாலே போதும் என்று கூறப்படுகிறது. அது என்ன மந்திரம் என்பது பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.