ஒருமுறை இந்த பொடியை தயார் செய்து உபயோகப்படுத்தினீர்கள் என்றால் மறுபடியும் ஷாம்பு, சீவக்காய் போன்ற எதற்கும் போகவே மாட்டீர்கள். அந்த அளவிற்கு முடியை பராமரிக்க கூடிய அற்புதமான பொடியாக திகழும்.

kuliyal podi
- Advertisement -

நம் முன்னோர்கள் காலத்தில் தலைக்கு குளிப்பது என்றால் சீவக்காய் அல்லது அரப்பு போன்றவற்றை தேய்த்து தான் குளிப்பார்கள். அவர்களுடைய தலைமுடி எந்த வித பாதிப்பும் இன்றி நன்றாக இருந்தது. ஆனால் இன்றைய தலை முறையினர் அந்தளவுக்கு சிரமப்படாமல் எளிதாக கிடைக்கக்கூடிய ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துவதால் தலையில் ரசாயன கலவை சேர்ந்து முடிக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆரோக்கியமான தலைமுடியை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பொடியை ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொண்டாலே போதும். கஷ்டப்பட்டு தலையை தேய்த்து அலசாமல் எளிமையான முறையில் அதே சமயம் ஆரோக்கியமான முடியை பெறுவதற்கும் இந்த பொடி உதவும். அப்படிப்பட்ட இந்த பொடியை எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

ஆரம்பத்தில் சீவக்காயை இரவு ஊற வைத்து காலையில் எழுந்து அம்மியில் அரைத்து அதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தார்கள். அதற்குப் பிறகு சீவக்காயை நன்றாக காய வைத்து மிஷினில் அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அதை தலைக்கு தேய்த்து குளித்தார்கள். காலப்போக்கில் சீவக்காயே மறைந்து போய் அதற்கு பதிலாக ஷாம்புகள் என்று பாட்டிலில் அடைக்கப்பட்ட ரசாயன கலவை வந்தது. இதனால் நம் தலையில் இருக்கக்கூடிய இயற்கையான எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி, தலை வறண்டு, முடி உதிர்வு என்பது அதிகமாக ஏற்பட்டது. இவை அனைத்தையும் எளிதாக நீக்குவதற்குரிய அருமையான அதே சமயம் சீவக்காய் சேர்க்காத இந்த பொடியை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

முகத்தில் இருக்கும் மாசு மருக்களை நீக்க உதவும் கடலை மாவை தான் நாம் இன்று தலைக்கு உபயோகப்படுத்தப் போகிறோம். 1/4 கப் அளவிற்கு சுத்தமான கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தய பொடியை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் 1/2 ஸ்பூன் அளவிற்கு வேப்ப இலை பொடியை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பவுடரில் தலைமுடிக்கு ஏற்றவாறு எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஊற்றி நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து இந்த கலவையை பார்க்கும் போது அது மிகவும் கெட்டியாக இருக்கும்.

இப்பொழுது இந்த கலவையை தலையில் தேய்த்து குளிக்கலாம். தலையில் அதிகப்படியான எண்ணெய் இருந்தால் இந்த கலவையை இரண்டு முறை போட்டு குளிக்க வேண்டும். லேசான பதத்தில் எண்ணெய் இருந்தால் ஒரு முறை தேய்த்து குளித்தால் அந்த எண்ணெய் பசை நீங்கிவிடும். கடலை மாவு தலையில் இருக்க கூடிய இறந்த செல்களை நீக்க உதவும். வெந்தயம் தலையில் இருக்கக்கூடிய பொடுகை ஒழிக்க உதவுவதோடு, தலைமுடியை செழிப்பாக வளரவும் செய்கிறது. வேப்ப இலை தலையில் இருக்கும் கிருமிகளை அழிக்க உதவுவதால் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: முகச்சுருக்கம் இன்றி அழகான இளமையான முகத்தை பெற இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினாலே போதும். என்றும் 16 போல் இளமையுடன் இருப்பீர்கள்.

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் ஒரு முறை உபயோகப்படுத்தினாலேயே மறுபடியும் வேறு எதையும் நோக்கி நாம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இயற்கையான முறையில் தலைக்கு குளித்து தலை முடியை பாதுகாத்து செழிப்பாக வளர செய்வோம்.

- Advertisement -