- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilதலை முடி பிரச்சனையை சரி செய்யும் எண்ணெய்

தலை முடி பிரச்சனையை சரி செய்யும் எண்ணெய்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தலையில் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும் பொதுவான பிரச்சினையாக திகழக்கூடியது முடி உதிர்தல், பொடுகு, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பலவிதமான மருந்து வகைகள், கை வைத்தியங்கள், பாட்டி வைத்தியம் இருக்கிறது. இவை அனைத்தையும் செய்தும் எந்தவித பலனும் இல்லை என்று நினைப்பவர்கள் ஒரே ஒருமுறை இந்த எண்ணெயை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் பொடுகு, முடி உதிர்தல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும். அந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தலையில் ஏற்படக்கூடிய ஃபங்கல் இன்ஃபெக்ஷனாக திகழ்வதுதான் பொடுகு. இந்த பொடுகை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்றால் அது சொரியாசிஸ் ஆக மாறும். இது முடி உதிர்தலுக்கு முக்கியமான காரணமாகவும் திகழ்கிறது. மேலும் தலைமுடிக்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லாத பட்சத்தில் தலைமுடி உதிர்தல் என்பது ஏற்படும். இவை அனைத்தையும் சரி செய்வதற்கு நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வெளிப்புறமாக சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறையாக தான் தலைக்கு எண்ணெய் வைத்தல் என்பது திகழ்கிறது. அந்த எண்ணையை சிறப்பான முறையில் நாமே தயார் செய்து உபயோகப்படுத்தினோம் என்றால் நமக்கு மேற் சொன்ன பிரச்சனைகள் எதுவுமே வராது.

- Advertisement -

இதற்கு 1/2 லிட்டர் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக சமையலுக்கு உபயோகப்படுத்தக் கூடிய மிளகு நம்முடைய தலைக்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் தலையில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அனைத்தும் நீக்கப்படுவதோடு நம்முடைய தலைமுடிக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். இந்த மிளகை 100 கிராம் எடுத்து முதல் நாளே பசும் தயிரில் தயார் செய்த மோரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மிளகு எந்த அளவிற்கு எடுத்தோமோ அதே அளவிற்கு மருதாணி இலைகளையும் எடுத்து அதையும் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே அளவு வெந்தயத்தையும் இரவே ஊறவைத்து அதையும் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் லேசாக சூடானதும் நாம் அரைத்து வைத்திருந்த இந்த மூன்று விழுதுகளையும் எண்ணெயில் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த கலவையில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து முற்றிலும் நீங்கி எண்ணையின் சலசலப்பு முற்றிலும் நின்று விடும் வரை அடுப்பிலேயே குறைந்த தீயில் வைத்து அவப்பொழுது கரண்டியை வைத்து கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதன் ஈரத்தன்மை முற்றிலும் நீங்கி சலசலப்பு அடங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். எண்ணெய் சூடு ஆறியதும் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி இதை நன்றாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் தலையில் இந்த எண்ணெயை தேய்த்து நன்றாக மசாஜ் செய்து ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் இந்த எண்ணெய் அப்படியே தலையில் இருக்கட்டும். பிறகு எப்பொழுதும் தலைக்கு குளிப்பது போல் குளித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க

கடைகளில் காசு கொடுத்து எண்ணெய்களை வாங்கி தலைக்கு உபயோகப்படுத்துவதை விட இந்த முறையில் வீட்டிலேயே தயார் செய்து வைத்து உபயோகப்படுத்த நம்முடைய தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்