முடி வளர்ச்சியை தடை செய்யும் இந்த ஒரு விஷயத்தை இனியும் செய்யாதீர்கள்! அசுர வேகத்தில் முடி வளர வீட்டில் இருக்கும் இந்த செடிகள் போதுமே!

hair4
- Advertisement -

மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொண்டே வருகிறோம். உணவு முறை பழக்கம் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க கூடிய நிறைய விஷயங்களில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறோம். அந்த வகையில் தலை முடியின் வளர்ச்சியில் கூட நாம் மாற்றத்தை கொண்டு வந்தது தான் முடி வேகமாக இழப்பதற்கும் காரணமாக அமைந்து விட்டது. அது என்ன? அசுர வேகத்தில் முடி வளர கூடிய சத்துக்கள் நிறைந்த செடிகள் நம் வீட்டில் இருப்பவை என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக தலை முடிக்கு செயற்கையான எந்த ஒரு இரசாயனங்களும் பயன்படுத்தக் கூடாது என்பது தான் முதல் விதியாகும். இதற்காக நம் முன்னோர்கள் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மூலிகை பொருட்களை காய வைத்து அரைத்து சீயக்காய் செய்து பயன்படுத்தி வந்தனர். அதனால் கருகருவென கூந்தலும், அடர்த்தியான கூந்தலும் நம் மக்களுக்கு இருந்து வந்துள்ளது. அப்போது எந்த ஷாம்பு அல்லது கண்டீஷனர் போன்றவையும் உபயோகிக்க படவில்லை.

- Advertisement -

இயற்கையாகவே நாம் நம் தலை முடியை பராமரித்து வந்து கொண்டிருந்த வேளையில் திடீரென முளைத்த ரசாயன கலவைகள் இன்று நம் தலைமுடி இழப்பிற்கும், வழுவின்மைக்கும் காரணமாக அமைந்து விட்டது வேதனைக்குரிய ஒரு விஷயமாகும். ரசாயன கலவைகள் கொண்டுள்ள ஷாம்புவை நாம் ஒரு மக் தண்ணீரில் முதலில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தண்ணீரை மட்டும் பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இதனால் நேரடியாக நம் வேர் கால்களுக்குள் அந்த ரசாயனக் கலவைகள் செயல் புரியாமல் தடுக்கப்படும். இதனால் தலைமுடி வளர்ச்சிக்கு எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல் இருக்கும்.

இனி ஷாம்புவை பயன்படுத்துபவர்கள் இப்படி பயன்படுத்தி பாருங்கள், ஷாம்புவை நேரடியாக பயன்படுத்துவதனால் தலைமுடி வறண்டு வலுவில்லாமல், ஈரப்பதம் இல்லாமல், பொடுகும், வேகமாக தலைமுடி உதிர்தல் பிரச்சனையும் ஏற்படுகிறது. முடிந்தால் ஷாம்புவை தவிர்த்து சீயக்காய் போன்றவற்றைப் மீண்டும் பயன்படுத்த முயற்சிப்பது தான் நல்லது.

- Advertisement -

இழந்த முடியை மீட்டெடுக்க நம் வீட்டில் இருக்கும் சில செடிகள் மூலிகையாக செயல்படுகிறது. அந்த வகையில் கற்றாழை, வேப்பிலை, செம்பருத்தி போன்றவை அதிக அளவு செயல் புரியும் தன்மை கொண்டுள்ளது. கற்றாழை ஜெல், வேப்பிலைச் சாறு கலந்து தலைமுடிக்கு நன்கு மசாஜ் செய்து பின்னர் தலையை அலசினால் தலை முடி பிரச்சனையில் பாதி தீர்ந்து நல்ல ஒரு வேகமான வளர்ச்சியை காணலாம்.

பிறகு அதன் வலுவான கூந்தலுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், செம்பருத்தி பூக்களை போட்டு லேசாக காய்ச்சி பின்னர் வடிகட்டி பயன்படுத்தி வந்தால் அசுர வேக வளர்ச்சி இருக்கும். செம்பருத்தியில் இருக்கும் நற்குணங்கள் நம் தலை முடியை நல்ல வாசம் ஆகவும், ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். மேலும் தலைமுடியின் வேர்க்கால்கள் வரை சென்று இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை தூண்டி விடவும் செய்யும். இதனால் வீட்டில் இருக்கும் இந்த மூலிகைப் பொருட்களைக் கொண்டே நம் தலைமுடியை நன்றாக பராமரிக்க அதிகம் செலவு செய்ய தேவையில்லை.

- Advertisement -