- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்தலைவலி, கை கால் வலி குறைய டிப்ஸ்

தலைவலி, கை கால் வலி குறைய டிப்ஸ்

- Advertisement -

வெயில் காலம் தொடங்கி விட்டது. இனிமே வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கும் சரி, வெளியில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் சரி, வியர்வை அதிகமாக இருக்கும். வேலை செய்வதால் உடல் சோர்வு அதிகமாக ஏற்படும். கை வலி கால் வலி, முதுகு வலி, தலைபாரம் உண்டாகும். இந்த பிரச்சினையில் இருந்து உடனடியாக விடுபட அந்த காலத்து பாட்டி வைத்தியத்தை தான் இன்றைய பயனுள்ள வீட்டு குறிப்பு பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகின்றோம்.

அதிக நேரம் சமையலறையில் நின்று சமைத்து குதிகால் வலிக்கிறதா, நிறைய நேரம் வண்டி ஓட்டி கால் வலி வந்து விட்டதா, நிறைய துணிக்கு சோப்பு போட்டு பிரஸ் போட்டு துவைத்து, கை வலி வந்து விட்டதா. முதுகுத்தண்டு வடம் உட்கார விடாமல் வலியை கொடுக்கிறதா. தலைபாரம் மண்டையை பிளத்து எடுக்கிறதா. இது எல்லாவற்றிற்கும் ஒரு எளிய சுலபமான தீர்வு இதோ.

- Advertisement -

வலி நீங்க ஒத்தடம்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். அதில் ஒரு பெரிய டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் போடவும். ஒரு கைப்பிடி நிரம்ப கல்லுப்பு போட்டு, நன்றாக வறுக்க வேண்டும். மஞ்சள் தூள், மஞ்சள் நிறம் மாறி சிவப்பு நிறம் வரும் வரை இதை வறுத்துக்கொள்ளுங்கள். இதில் இருந்து லேசாக புகை வரும். மஞ்சளும் உப்பும் நன்றாக வறுபட்டு சூடான பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணியில் இந்த இரண்டு பொருட்களையும் கொட்டி, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

ஒத்தடம் கொடுக்கக் கூடிய வகையில் இந்த முடிச்சு தயார் செய்யப்பட வேண்டும். இப்போது இந்த முடிச்சை சூடாக இருக்கும்போதே, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும். இவ்வளவுதான் வைத்தியம். இது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த வைத்தியத்தை மறந்தே போய் விட்டோம்.

- Advertisement -

தலைபாரம் உள்ளபோது இதே போல இந்த முடிச்சை தயார் செய்து தலை பாரம் உள்ள இடத்தில், நெற்றியில் வைத்து வைத்து எடுத்தால் தலைபாரம் குறையும். கால் வலி இருக்கும் போது வலி உள்ள இடத்தில் இந்த மஞ்சள் உப்பு ஒத்தடத்தை கொடுக்கலாம். மஞ்சள் உப்பு இது இரண்டிற்கும் மருத்துவ குணம் அதிகம். அதை சூடு செய்து ஒத்தடம் கொடுக்கும் போது வலி நிவாரணம் உண்டாகும்

இந்த முடிச்சில் இருக்கும் சூடு குறைந்து விட்டால் தோசை கல்லை நன்றாக சூடு செய்து, அதன் மீது இந்த முடிச்சை வைத்து, சூடு செய்து மீண்டும் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்துப்பாருங்கள். வலிக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும். உங்கள் உடம்பில் எந்த வியாதியும் இல்லை, அடிக்கடி இதுபோல பிரச்சனை, வலி ஏற்படுகிறது என்றால் மட்டும் இந்த குறிப்பை பின்பற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: சனி பெயர்ச்சி பரிகாரம் 2025

மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், உடல் உபாதை உள்ளவர்கள், ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்களாக இருந்தால், மருத்துவரையும் ஒரு முறை அணுகுவது நல்லது. இந்த எளிய வீட்டு குறிப்பு அவசர காலத்தில் உங்களுக்கு டக்குனு பயன்படும். அதற்காகத்தான் இன்று உங்களோடு இதை பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். தேவைப்படுபவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்