- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதலையெழுத்தை மாற்றும் பூ

தலையெழுத்தை மாற்றும் பூ

- Advertisement -

தெய்வ வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாட்டின் பொழுது தெய்வத்திற்கு என்று சில பொருட்களை வழங்குவார்கள். அது அபிஷேக பொருட்களாகவும் இருக்கலாம், அலங்காரப் பொருட்களாகவும் இருக்கலாம். நம்மால் எந்த பொருளை வாங்கித் தர முடியுமோ அந்த பொருளை வாங்கி கொடுத்து தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பழக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும். அப்படி தெய்வ வழிபாட்டின் சமயத்தில் நாம் வாங்கித் தரக்கூடிய பொருளாக திகழ்வதுதான் பூக்கள்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பூக்கள் உகந்த பூக்களாக இருக்கும். அப்படி உகந்த பூக்களை அந்த தெய்வத்திற்கு வாங்கி தருவதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு விதமான பலனும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய தலையெழுத்தை மாற்றி சிறப்பான வாழ்க்கை அமைத்து தரக்கூடிய ஒரு பூவை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தலையெழுத்தை மாற்றும் பூ

நம்மை படைத்தது பிரம்மன் ஆக இருந்தாலும் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்கி நல்ல முறையில் வாழ்வதற்கு வழி வகுக்கக் கூடிய தெய்வமாக திகழ்பவர்தான் சிவபெருமான். நம்முடைய கர்ம வினைகளை நீக்கி மோட்சத்தை தரக்கூடிய அற்புதமான தெய்வம் ஆக சிவபெருமான் திகழ்கிறார். பலரும் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் கஷ்டங்கள் அதிகரிக்கும் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் நம்முடைய கர்ம வினைகள் குறைகிறது. எந்த அளவிற்கு நாம் கஷ்டங்களை அனுபவிக்கிறோம் அந்த அளவிற்கு நம்முடைய கர்ம வினைகள் குறையும். நம்முடைய கர்ம வினைகள் குறையும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்ற நிலையை அடைவதோடு கடைசியில் மோட்சத்தை அடைவோம் என்பதுதான். அதனால் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கடைசி காலத்தில் மோட்சம் என்பது கண்டிப்பாக இருக்கும். இந்த பதிவில் எந்த மலரை வைத்து சிவபெருமானை வழிப்பட்டால் நம்முடைய தலையெழுத்து மாறும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

சிவபெருமானுக்கு உகந்த நாட்களாக திகழ்வது பிரதோஷம் மற்றும் சிவராத்திரி. வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சிவராத்திரியை தவிர்த்து மாதா மாதம் சிவராத்திரி என்பது வரும். அன்றைய தினமும் சிவபெருமானுக்கு உகந்த தினமாகவே கருதப்படுகிறது. பிரதோஷத்தை பொறுத்தவரை மாதத்தில் இரண்டு முறை வரும், சிவராத்திரி மாதத்தில் ஒரு முறை வரும், மாதத்தில் மூன்று நாட்கள் இந்த ஒரு மலரை மட்டும் சிவபெருமானுக்கு கொடுத்து நாம் இந்த ஒரு மந்திரத்தை கூறினோம் என்றால் நம் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த மலர் தான் நாகலிங்கம் மலர். நாகலிங்க மலர் என்பது பரவலாக அனைத்து இடத்திலும் கிடைக்காது ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த மரங்கள் இருக்கும். பெயருக்கு ஏற்றார் போல் இந்த பூவிற்கு என்று தனி மகத்துவம் இருக்கிறது. காரணம் என்னவென்றால் ஒரு சிவலிங்கமும் அதற்கு மேல் ஐந்து தலை நாகமும் இருப்பது போலவே காட்சியளிக்கும். மற்ற தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வதை விட சிவபெருமானுக்கு இந்த நாகலிங்கம் பூவை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அதீத பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட இந்த நாகலிங்கம் பூவை மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ நாட்களிலும் மாத சிவராத்திரியிலும் சிவபெருமான் ஆலயத்திற்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு அவருக்கு முன்பாக அமர்ந்து “ஓம் சிவாய நம” என்னும் மந்திரத்தை நம்மால் இயன்ற முறை எவ்வளவு முறை கூற முடியுமோ அவ்வளவு முறை கூற வேண்டும். எண்ணிக்கையை கணக்கில் வைக்காமல் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை கூறுவது போல் கணக்கில் வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க சிவபெருமானையே கருத்தில் கொண்டு அந்த மந்திரத்தை கூறும்பொழுது சிவபெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நாம் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீராத பழிச்சொல்லை நீக்கும் முருகன் வழிபாடு

மிகவும் அதி அற்புதமான இந்த ஒரு மலரை சிவபெருமானுக்கு சூட்டி இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருந்து வந்த கஷ்ட காலம் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்