பெண்கள் எப்போதெல்லாம் தலைக்குக் குளிக்கிறீங்களோ அப்போதெல்லாம் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும். எந்த ஒரு கெட்ட சக்தியும், தரித்திரமும் பெண்களை நெருங்க முடியாது.

women3
- Advertisement -

பெண்கள் என்றாலே எப்போதும் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஆகவேதான் அந்த காலத்தில் இருந்து பெண்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்ற ஒரு வரைமுறையை நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். ஆனால் இன்று காலத்துக்கு ஏற்ப நாம் எல்லாவற்றையும் நம் வசதிக்கு ஏற்ப மாற்றி விட்டோம். ஆகையால் பிரச்சனைகளும் நிறைய பெண்களுக்கு வந்து கொண்டே தான் இருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மூலம் பெண் குழந்தைகள், குழந்தை பெற்ற தாய்மார்கள், வயதுக்கு வந்த பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது உண்டு.

women6

இதற்காக ஆண்களுக்கு பிரச்சனை இல்லையா என்று கேட்க வேண்டாம். ஆண்களை ஒப்பிட்டு பார்க்கும் போது பெண்களின் மனது கொஞ்சம் பலவீனமானது என்பதால் இவர்களுக்கு எதிர்மறை ஆற்றலின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். பெண்கள் தங்களுக்கு தாங்களே ஒரு பாதுகாப்பு வட்டத்தைப் போட்டுக் கொள்ள, பெண்களிடம் எந்த ஒரு கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் எதிர்மறை ஆற்றலும் நெருங்காமல் இருக்க செய்ய வேண்டிய ஒரு சுலபமான பரிகாரம் என்ன.

- Advertisement -

கூடுமானவரை பெண்கள் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை இரண்டு நாட்கள் தலைக்கு குளித்து விட வேண்டும். இது அல்லாமல் பெண்கள் எப்போதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்கள் அப்போதெல்லாம் தலைக்கு சாம்பிராணி தூபம் போட வேண்டும். வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீக்கப்படுகிறது.

dhupam1

பெண்கள் தங்களுடைய தலைக்கு சாம்பிராணி தூபம் போடுவதன், மூலம் பெண்கள் எதிர்மறை ஆற்றலில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். தலையில் சாம்பிராணி தூபத்திலிருந்து வரும் வாசம் படிந்து, அவர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமைந்துவிடுகிறது. எதிர்மறை ஆற்றல் ஒருவருடைய உடம்பில் ஊடுருவ வேண்டும் என்றால் அது அவர்களுடைய உச்சந்தலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

- Advertisement -

பெண்கள் அவர்களுடைய தலையை  பாதுகாப்பு கவசத்திற்கு கொண்டு வந்து விட்டால் நிச்சயமாக கண்ணுக்குத் தெரியாத எந்த எதிர்மறை ஆற்றலும் பெண்களின் உடம்புக்குள் புகாமல் பாதுகாப்பாக இருக்கும். இதனால்தான் அந்தக் காலத்திலேயே குழந்தைகளுக்கு தலைக்கு குளிப்பாட்டிய உடன், சாம்பிராணி தூபம் போடக்கூடிய வழக்கத்தைக் கொண்டு வந்தார்கள். பெண்கள் தலைக்குக் குளித்தவுடன் தலைமுடிக்கு சாம்பிராணி தூபம் போட வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

dhupam

சளி பிடிக்கக் கூடாது தலை சீக்கிரமாக உளரவேண்டும் என்ற காரணம் இருந்தால் கூட, இந்த தலைக்கு சாம்பிராணி தூபம் போடக்கூடிய வழக்கத்தில் மறைந்திருக்கும் விஷயம் இதுதான். கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி, அதில் சாம்பிராணி பொடியோடு கொஞ்சமாக வெண் குங்கிலியம், கொஞ்சமாக மருதாணி விதைகளைப் போட்டு, அதில் வரக்கூடிய புகையில் பெண்கள் தலைக்கு குளித்துவிட்டு சாம்பிராணி தூபம் போட்டுக் கொண்டால் அவ்வளவு நல்லது. உங்களை பிடித்த தரித்திரம் உங்களை விட்டு நீங்கும். மேலும் தரித்திரம் உங்களை வந்து சேராமல் தடுக்க கூடிய சக்தியும் இந்த சாம்பிராணி புகைக்கு உண்டு இது தவிர எந்த ஒரு எதிர்மறை ஆற்றலின் மூலமும் உங்களுக்கு தொந்தரவு இருக்காது. முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -