உங்களது தலைவிதி எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை மாற்ற, இதை விட சுலபமான சூட்சமம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

எவ்வளவு பெரிய பணவசதி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை என்பது விதிப்படி வரும். தொடர்ந்து வெற்றியை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். பண கஷ்டமாக இருக்கலாம், மன கஷ்டமாக இருக்கலாம், உடல் உபாதைகளாக இருக்கலாம், தீராத நோயாக கூட இருக்கலாம். பொதுவாகவே பணம் படைத்தவர்கள் எல்லாம் பிரச்சினைகள் என்று வந்து விட்டால், முதலில் பெரிய பெரிய வாஸ்து சாஸ்திர நிபுணர்களை பார்த்து அதிகப்படியான செலவில் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்து விடுவார்கள். இதை தவறு என்று கூறவில்லை. ஆனால் அப்படிப்பட்ட பெரிய பெரிய பரிகாரங்களை செய்தும் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் இந்த பூமியில் இருக்கின்றது. பூர்வ ஜென்ம சாபம், பித்ருக்களின் சாபம், இப்படி நமக்கே தெரியாமல் நாம் செய்த பாவங்கள் நம்மை பின் தொடர்வதை நாம் நிச்சயமாக அறிந்திருக்க மாட்டோம். பொதுவாகவே இப்படிப்பட்ட பிரச்சனைகளை மேற்கொள்பவர்கள் முடிந்தவரை பிரச்சனைகள் தீரும் வரை அசைவ சாப்பாட்டை தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.

food

எப்படிப்பட்ட தோஷத்திற்கும் முதல் பரிகாரம் என்பது அசைவ சாப்பாட்டை தவிர்ப்பது தான். பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய இந்த பரிகாரம், பல பேருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தப் பரிகாரத்தை, இப்படி முறையாக செய்ய வேண்டும் என்பது சிலருக்கு தெரிந்திருக்காது. இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடுமா? என்ற சந்தேகம், இந்த பதிவை படித்து முடித்தவுடன் நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு பலன் கைமேல் கிடைக்கும் என்பதுதான் உண்மை. அந்த சுலபமான ரகசிய பரிகாரம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பணக்காரர்களுக்கு பிரச்சனை வந்தால் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி விட வேண்டாம். சாதாரண சாமானிய மக்களுக்கு பிரச்சனை வந்தால் கூட இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். அனுபவத்தில் ஒரு பணக்காரருக்கு இருந்த பிரச்சனை, இந்த பரிகாரத்தின் மூலம் தீர்ந்ததால் உதாரணம் சொல்லப்பட்டது. பசு தன் உடலில் பஞ்சபூத சக்தியையும் அடக்கி வைத்துள்ளது. நாய்க்கு நீர் சக்தி அடங்கியுள்ளது. எறும்பிற்கு நெருப்பின் சக்தி அடங்கியுள்ளது. காகத்திற்கு காற்றின் சக்தி அடங்கியுள்ளது. பல பறவைகள் வானத்தில் உயரத்தில் பறக்க ஆகாய சக்தியை உள்ளடக்கியுள்ளது.

தினசரி உணவு உண்பதற்கு முன்பாக நம் முன்னோர்களை,  மனதில் நினைத்துக்கொண்டு செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க முதலில் வாழை இலையில் உணவை கடவுளுக்கும், நிலத்தில் காக்கைக்கும், வாழை இலையில் பசுவுக்கும், நாய், எறும்பு இவைகளுக்கு சிறிது உணவை தரையில் வைக்கலாம். வைத்துவிட்டு ஒரு மண் சட்டியில் பறவைகளுக்கு நீரை வைத்து விட்டு, அதன் பின்புதான் நீங்கள் உணவு அருந்த வேண்டும். எப்படிப்பட்ட சாபத்தையும் நிவர்த்தி செய்யும் இந்த ஒரு பரிகாரம்.

birds

இதை முறைப்படி இப்படித்தான் செய்யவேண்டும். எந்த மாற்றமும் இல்லை. எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது நிச்சயமாக குறைவதை கண்கூடாக பார்க்கலாம். பலர் இந்தப் பரிகாரத்தை செய்து பலன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முடிந்தவரை உங்களது வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது, ஆதரவு இல்லாமல் இருக்கும் சவத்தை நல்லபடியாக தகனம் செய்ய உதவி செய்யுங்கள். இதை கெட்ட சகுணம் என்று நினைக்காதீர்கள். இறுதிச்சடங்கிற்கு நீங்கள் செய்யும் இந்த ஒரு உதவி எப்படிப்பட்ட பலனைத்தரும் என்பது பலருக்கு புரிவதில்லை. ஆதரவு இல்லாமல் இறந்தவர்களுக்கு, நீங்களே சென்று இந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அதற்கானவர்களிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து இறுதிச் சடங்கை முடிக்க தேவையான செலவை ஏற்றுக் கொண்டால் கூட பெரிய புண்ணியம் தான்.

நம்முடைய பித்ருக்களின் ஆசீர்வாதத்தை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால் உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஆலமரத்திற்கு நீரை ஊற்றி வாருங்கள்!