அடிக்கடி தலையில் நீர் கோர்த்து தலையை தூக்க முடியாமல் பாரமாக இருக்கிறதா? அப்போ இத மட்டும் பண்ணுங்க!

head-ache-malli
- Advertisement -

ஒரு சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அடிக்கடி தலைவலி ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதற்கு வீட்டிலேயே எளிமையான முறையில் தீர்வு காண முடியும். தலையில் நீர் கோர்த்தால் தலைவலியோடு, தலையும் பாரமாக இருக்கும். சரியாக உட்கார கூட முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். படுத்தால் போதும் என்கிற நிலைமைக்கு போய் விடுவோம். தலையில் நீர் கோர்த்து கொள்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு என்ன தீர்வு என்பதை இந்த பதிவில் அறிவோம் வாருங்கள்.

head-ache

உங்கள் தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் அதிக நீர் இருப்பதால் இவ்வாறு பாரமாக உணர்கிறீர்கள். தலைக்குக் குளித்து விட்டு சரியாக தலையை துவட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் தலைமுடியில் இருக்கும் நீர் மண்டைக்குள் இறங்கிவிடும். அப்படி நன்றாகத் துவட்டி இருந்தாலும் தலைக்கு குளித்து விட்டு உடனே தூங்கினால் அப்போதும் இது போல் மண்டையில் நீர் அதிகமாக சேர்ந்து விடும். மன அழுத்தம், ஓய்வின்மை, அதிக வியர்வை போன்றவையும் தலைவலிக்குக் காரணமாக அமையும்.

- Advertisement -

இதற்கு ஆயுர்வேதத்தில் வீட்டிலேயே எளிமையான பொருட்களை பயன்படுத்தி உடனடியாக தீர்வு காண முடியும். இதற்கு தேவையான பொருட்கள் சுக்கு, மல்லி, மஞ்சள் தூள், மிளகு ஆகிய நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் நொடியில் இந்த தலை பாரத்தை போக்கி விடலாம்.

dhaniya

ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கொதிக்கும் அந்த தண்ணீரில் தனியாவை அதாவது மல்லி விதையை போட்டுக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இரண்டாவதாக மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். இறுதியாக சுக்கை பொடித்து பவுடராக ஆக்கி கலந்து கொள்ளுங்கள். இவை நன்கு கலந்து கொதித்து தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறியதும் அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு பெட்ஷீட் எடுத்து மூடிக் கொண்டு ஆவி பிடியுங்கள். நீங்கள் ஆவி பிடிக்க பிடிக்க உங்கள் முகத்தில் வியர்வை வழியும். வியர்வையை டவல் கொண்டு ஒற்றி எடுத்துக் கொண்டே வாருங்கள். இது போல் குறைந்தது ஒரு இருபது நிமிடமாவது செய்யுங்கள். தண்ணீரின் வெப்பம் குறைந்ததும் நீங்கள் எழுந்து விடலாம்.

aavi pidippathu

20 நிமிடத்தில் உங்கள் தலையில் இருக்கும் மொத்த நீரும் இறங்கி வியர்வையாக முகத்தின் வழியே வெளியேறி விடும். அதற்கு பிறகு பாருங்கள்! உங்கள் தலை பாரம் எங்கே இருக்கின்றது என்று தெரியாத அளவிற்கு நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள்! ஒற்றைத் தலைவலிக்கு சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவார்கள். இவ்வாறு செய்தால் பத்து நிமிடத்தில் ஒற்றை தலைவலி பஞ்சாய் பறந்து விடும்.

- Advertisement -

sukku

பாலில் மஞ்சள் தூள், இடித்த மிளகு, இஞ்சி, சுக்கு இடித்து சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் நுரையீரலில் இருக்கும் சளி நீங்கும். சுவாசிப்பதற்கு சுலபமாக இருக்கும். மேலும் தலைவலியும் நீங்கும். தனியா விதைகளை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் நெற்றியில் இருக்கும் நீர் ஈர்த்துக் கொள்ளும். அதனால் தலை பாரம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

vetrilai

அந்த காலத்திலெல்லாம் தாத்தா மற்றும் பாட்டிமார்கள் வெற்றிலை போடும் பழக்கம் கொண்டு இருப்பார்கள். அவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டு காம்பை கில்லி பேத்தி மற்றும் பேரன் மார்களுக்கு கொடுப்பார்கள். வெற்றிலை காம்புகளை மென்று அதன் சாற்றை அவர்கள் விழுங்குவதால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் வராமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள, பார்ப்பதற்கு பலபலன்னு இருக்க, இவ்வளவு ஈஸி டிப்ஸா? காசு கூட நிறைய செலவாகாது. இந்த 2 பொருள் போதும்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -