1 கப் அரிசி மாவு இருந்தா போதும் இது போல ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் செஞ்சு கொடுத்தா எல்லோருமே உங்களை பாராட்டித் தள்ளிடுவாங்க! தாளித்த குட்டி கொழுக்கட்டைகள் எப்படி செய்வது?

small-kolukkattai1
- Advertisement -

சதா ஒரே மாதிரியான டிபன் வகைகளை செய்து சாப்பிட்டவர்களுக்கு இது போல ருசியான தாளித்த கொழுக்கட்டையை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்துப் பாருங்கள், வீட்டில் இருக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள். குட்டி குட்டி அரிசி மாவு உருண்டைகளை வேக வைத்து ஒரு பிரட்டு பிரட்டி கொடுத்தா போதும், அவ்வளவு அருமையாக இருக்கும். உங்கள் காலை உணவை அழகாக்கித் தரும் இந்த குட்டி குட்டி அரிசி மாவு தாளித்த கொழுக்கட்டை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

தாளிச்ச குட்டி குட்டி கொழுக்கட்டை எப்படி செய்வது?
அடுப்பை பற்ற வைத்து வாணலி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்ததும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு சாதாரண சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

தண்ணீர் முழுவதும் ஈர்த்ததும் 3 நிமிடம் மூடி வைத்தால் ஆவியிலே அரிசி மாவு நன்கு வெந்து விடும். அதன் பிறகு அதை அப்படியே ஃபேன் காற்றில் ஆற விட்டு விடுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாக கைகளில் எடுத்து உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லா மாவும் உருட்டிய பிறகு அடுப்பில் இட்லி பானை ஒன்றை வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு இட்லித் தட்டில் எல்லா மாவு உருண்டைகளையும் இட்டு 5 நிமிடம் நன்கு வேக வைத்து எடுங்கள்.

இப்போது வேறொரு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு நன்கு காயவிடவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு இணுக்கு கறிவேப்பிலை மற்றும் 3 வர மிளகாய்களை கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளை அல்லது கறுப்பு எள் ஏதாவது ஒன்றை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு நீங்கள் வேக வைத்து எடுத்துள்ள அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பிறகு இந்த கொழுக்கட்டைக்கு தேவையான அளவிற்கு கொஞ்சம் போல் உப்பைத் தூவி கொள்ளுங்கள். அதனுடன் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி விடுங்கள். இறுதியாக ஒரு ஸ்பூன் அளவுக்கு இட்லி பொடி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி 2 நிமிடம் வதக்கி எடுத்து சுடச்சுட ஒரு பாத்திரத்தில் வைத்து பரிமாறுங்கள். குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு உருண்டை கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் தின்று தீர்த்து விடுவார்கள்.

- Advertisement -