- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகேட்ட வரம் தரும் தாமரை பூ

கேட்ட வரம் தரும் தாமரை பூ

- Advertisement -

கேட்ட வரம் கேட்டபடி கொடுக்கக் கூடியது இந்த தாமரை பூவாகும். தாமரை மகாலட்சுமி வீற்றிருக்கும் மலராக இருக்கிறது. ஆன்மீக ரீதியாக தெய்வீக ஆற்றல்களை கொண்டுள்ள இந்த தாமரை பூவுக்கு மகத்துவமான சக்திகளும் உண்டு. மகாலட்சுமிக்கு உகந்த இந்த தாமரை பூ வழிபாடு இப்படி செய்வதன் மூலம் நாம் வேண்டிய வரங்கள் எளிதாக கிடைக்கும் என்பது ஐதீகம். தாமரை வழிபாட்டு ரகசியத்தை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

மகாலட்சுமி மட்டுமல்ல, எல்லா தெய்வங்களும் அமர்ந்திருக்கக் கூடிய ஆசனம் தாமரை. தாமரை மலரில் தான் தெய்வங்கள் அமர்ந்திருப்பதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. சக்தி, லட்சுமி, சரஸ்வதி, பிரம்ம தேவர் என்று பெரும்பாலான கடவுள்கள் அமர்ந்திருக்கக் கூடிய இந்த தாமரை மலர் மற்ற மலர்களை காட்டிலும் தனித்துவமானது. நீரில் பூக்கும் இந்த பெரிய மலர்கள் கடவுளுக்கு நிகராகவே பாவிக்கப்படுகிறது.

- Advertisement -

ஒற்றைத் தாமரை மலர் இருந்தால் போதும், ஓராயிரம் பிரச்சனைகளை தீர்க்கலாம். கோவிலுக்கு செல்லும் பொழுது தாமரை மலரை அர்ச்சனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்கும். தாமரை மலரை தெய்வத்தின் திருவடியில் சேர்த்து விளக்கேற்றி வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த மலரை வீட்டில் இருக்கும் தெய்வ படங்களுக்கு சாற்றி வழிபடுவதன் மூலமும் வேண்டிய வரத்தை அடையலாம். குறிப்பாக பண ரீதியான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய தன்மை தாமரைக்கு உண்டு. தாமரை மலரை மஹாலட்சுமியின் திருவடியில் வைத்து, தினமும் மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருபவர்களுக்கு சகல விதமான சௌபாக்கியங்களும், அஷ்ட ஐஸ்வரியங்களும் கிட்டும். தாமரை மலரை கொண்டு மாலை கோர்த்து கோவிலுக்கு சென்று தெய்வங்களுக்கு சாற்றி வழிபட்டு வருவதன் மூலம் எப்பேர்ப்பட்ட துன்பங்களும், கஷ்டங்களும் நீங்குவதாக ஒரு நம்பிக்கை உண்டு.

- Advertisement -

தாமரை மலர் மட்டும் அல்லாமல், அதன் விதைகளை மணியாக கோர்த்து தாமரை மணி மாலைகளை தியானத்திற்கு பயன்படுத்துவார்கள். இந்த தியான மாலை கொண்டு தியானம் செய்யும் பொழுது மனம் ஒருமுகப்படும் என்பது நம்பிக்கை. எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் தியானம் செய்ய தாமரை மணி மாலை உதவி செய்யும். தாமரை விதைகள் கிடைத்தால் அதை கொண்டு வந்து பூஜை அறையில் வையுங்கள். தாமரை விதைகள் தொழில், வியாபாரம் செய்பவர்கள் அவர்களுடைய கல்லாப்பெட்டியில் போட்டு வைக்கலாம். தாமரை விதைகள் பணத்தை ஈர்க்கக் கூடியது. வீண் விரயங்கள் ஆகாமல் தடுக்க பணத்துடன் எப்போதும் தாமரை விதைகளை போட்டு வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே:

சாமி கும்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்

தாமரைத் தண்டு கொண்டு திரிகள் தயாரிக்கப்படுகிறது. இந்த திரிகளை விளக்கில் போட்டு தீபம் ஏற்றுவதால் சகல விதமான தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம் உண்டு. கடன் பிரச்சனைகள், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும், எனவே மாலை வேளையில் குபேர மூலையில் குபேர விளக்கில் தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். எல்லா விதமான சொத்து சுகங்களும் உங்களுக்கு கிடைக்கும். வெண்தாமரை அல்லது செந்தாமரை படங்கள் வீட்டில் மாட்டி வைப்பதாலும், அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகள் குறையும். 20 இதழ்களில் இருந்து, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையும் உள்ளது. இவை அபூர்வ வகையாக இருக்கிறது.

சற்று முன்