சுமங்கலி பெண்கள் ‘தாம்பூலம்’ வாங்கும் பொழுது செய்யவே கூடாத தவறு என்னன்னு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!

thamboolam2

கொலு வைக்கும் நவராத்திரியின் பொழுதும், மற்ற பண்டிகை விழாக்களின் பொழுதும் நம் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்புவது என்பது காலம் காலமாக நாம் கடைபிடித்து வரும் ஒரு சம்பிரதாயம் ஆகும். தாம்பூலம் கொடுப்பவர்களும், அதனை பெற்றுக் கொள்பவர்களும் மூன்று தேவியர்களின் அம்சமாக கூறப்படுகிறது. அதாவது மகாலட்சுமி, மஹா துர்க்கை, சரஸ்வதி தேவி ஆகிய மூவரும் தாம்பூலத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். அதனை கொடுப்பவரும், வாங்குபவரும் இந்த மூன்று தேவியர்களின் ஸ்வரூபமாக சாஸ்திரம் பார்க்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த தாம்பூலத்தை சுமங்கலிப் பெண்கள் வாங்கும் பொழுது எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vetrilai-pakku-pazham

தாம்பூலம் கொடுக்கும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
விசேஷ நாட்களில் சாதாரணமாக உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்புவது செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும். பூஜை நிறைவடைந்ததும் தாம்பூலம் கொடுக்கும் பொழுது தாம்பூலத்துடன் நீங்கள் கொடுக்கும் பொருட்களில் முக்கியமாக தேங்காய் இடம் பெற்றிருக்க வேண்டும். அந்தத் தேங்காய் ஆனது சாதாரண தேங்காயாக இல்லாமல், மட்டை தேங்காயாக இருக்க வேண்டும்.

மட்டை தேங்காயில் இருக்கும் தத்துவத்தை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். மட்டைத் தேங்காயில் மட்டை ஆனது ஆணவத்தைக் குறிக்கிறது. அதிலிருக்கும் நார் ஆனது மாயை போன்ற தோற்றமுடையது. ஓடு பகுதி வன்மத்தை பறைசாற்றுகிறது. இவற்றையெல்லாம் நீக்கினால் தான் நமக்கு வெண்மையான சுவைமிகுந்த தேங்காய் கிடைக்கும்.

mattai-thengai-coconut

அதனால் தான் பூஜையின் பொழுது மட்டை தேங்காய் வைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த மட்டைத் தேங்காயை தாம்பூலத்துடன் சேர்த்து கொடுக்கும் பொழுது ஆணவம் அழிந்து இறைவனை அடையக்கூடிய நற்சிந்தனைகள் மேலோங்கும் என்பது ஐதீகம். தாம்பூலம் கொடுப்பவர்கள் நார் உடன் கூடிய மட்டை தேங்காய்களை முழுவதுமாக மஞ்சள் தடவி, பூ சுற்றி இரண்டு கைகளாலும் அதனை சுமங்கலிப் பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

தாம்பூலம் வாங்கும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
தாம்பூலத்தை வாங்கும் சுமங்கலி பெண்கள் அதை பெற்றுக் கொள்ளும் பொழுது கைகளால் பெற்றுக் கொள்ளக் கூடாது. மடியேந்தி தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதாவது உங்கள் சேலையின் முந்தானையை விரித்து காண்பித்து அதில் தாம்பூலத்தை பெற்றுக் கொள்வது தான் முறையான பழக்கமாகும். இதை அறிந்திராத சுமங்கலிப் பெண்களுக்கு மற்ற பெண்மணிகள் நிச்சயம் கற்றுக் கொடுக்க வேண்டும். தாம்பூலத்தை வாங்கும் பெண்மணிகள் அம்பாளுக்கு இணையாக பாவிக்கப்படுகிறார்கள். சாட்சாத் அந்த அம்பாளே வந்து தாம்பூலம் பெற்றுக் கொண்டு செல்வதாக சாத்திரங்கள் குறிப்பிடுகிறது.

thamboolam1

இதனால் தாம்பூலம் வாங்குபவர்களுக்கும் சரி, கொடுப்பவர்களுக்கும் சரி நிறைய நன்மைகள் நடைபெறும். யாராவது தாம்பூலம் வாங்க கூப்பிட்டால் மறுக்காமல் சென்று வாங்கி விட வேண்டும். மறுத்தால் அது உங்களுக்கு அபசகுனமாக மாறிவிடும். தவிர்க்க முடியாத சூழலில் நீங்கள் செல்லாமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் மற்ற சூழ்நிலைகளில் தாம்பூலம் கொடுக்க கூப்பிட்டால் சுமங்கலிப் பெண்கள் நிச்சயம் சந்தோஷமாக சென்று வாங்கி வருவது இருவருக்கும் லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
ஆகஸ்ட் 2, 2020 ஆடி பதினெட்டாம் நாள் நிவேதனமாக காப்பரிசி தயாரிப்பது எப்படி? இதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.