தாமிரபரணி மகாபுஷ்கரம் விழா 2018

thamirabarani-compressed
- Advertisement -

நதிகளை தெய்வமாக வழிபடுவது இந்து மதத்தில் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் ஒரு வழக்கமாகும். நமது நாட்டில் ஓடும் அனைத்து நதிகளும் ஏதோ ஒரு வகையில் தெய்வங்களுடன் தொடர்பு கொண்டவையாகும். இந்த நதிகளுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் விழாவிற்கு “புஷ்கரம், கும்பமேளா” என்ற பெயர் உண்டு. “144” ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் நதி ஆராதனை விழா “மகாபுஷ்கரம்” எனப்படும். அந்த வகையில் தமிழகத்தின் தொன்மையான நதியான “பொருனை” எனப்படும் “தாமிரபரணி” நதியின் 144 ஆம் ஆண்டு மகாபுஷ்கர விழா நாளை 12.10.2018 முதல் 23.10.2018 வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கியத்துவத்தை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

pushkaram 3

“புஷ்கரம்” என்பது பிரம்ம தேவன் கையில் இருக்கும் புனித தீர்த்தம் ஆகும். பிரகஸ்பதியான “குரு பகவான்” கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து அந்த புஸ்கரத்தை பெற்றதால் புனித நதிகள் அனைத்தின் மீதும் சுப கிரகமான குரு பகவானின் ஆதிக்கம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குரு கிரகம் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் போதும் பாரத நாட்டில் உள்ள ஒவ்வொரு புனித நதியில் புஸ்கரம், கும்பமேளா திருவிழா நடத்தப்படுகிறது அந்த வகையில் இந்தாண்டு திருக்கணித பஞ்சாங்கம் படி 11.10.2018 இரவு 7.20 மணிக்கு “துலாம்” ராசியிலிருந்து “விருச்சிகம்” ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். ராசி படி விருச்சிக ராசிக்குரிய புனித நதி தாமிரபரணி. எனவே இந்த தாமிரபரணி நதியில் மகாபுஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

தாமிரபரணி நதி தென்னாடு எனப்படும் பொதிகை மலையை நோக்கி சிவ பெருமான் பூமியை சமப்படுத்த அனுப்பப்பட்ட மகா சித்தர் அகத்தியர் நீராடி வழிபட சிவபெருமானால் ஏற்படுத்தப்பட்ட புனித நதியாகும். இந்த நதி பார்ப்பதற்கு தாமிர நிறத்தில் இருப்பதால் “தாமிர வர்ணி” என்று பெயர்பெற்று காலப்போக்கில் தாமிரபரணி என பெயர்பெற்றது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்த நதி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் சென்று கலக்கிறது. மகாபாரத இதிகாசத்தில் தாமிரபரணி நதியை பற்றிய வர்ணனைகள் உள்ளன. பண்டைய எகிப்திய, கிரேக்க சரித்திர குறிப்புகளிலும் தமிழகத்தின் தாமிரபரணி நதி பற்றி கூறப்பட்டிருக்கிறது.

agathiyar

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, உயிர்காக்கும் பல மூலிகைகளின் சத்து நிறைந்த நதியாக வரும் தாமிரபரணி நதியில் நீராடி, இந்த நதி ஓடும் பூமியில் கோவில் கொண்டிருக்கும் திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அன்னையையும், “நவ திருப்பதி” கோவில்களில் நவகிரகங்களின் அம்சமாக கோவில் கொண்டிருக்கும் திருமாலையும் வழிபடுவது சிவன் மற்றும் விஷ்ணுவின் பூரண அருளாசிகள் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் கிடைக்கும். அகத்திய சித்தரின் ஆசிகளும் உங்களின் பல பாவங்களை போக்கும். அறியாமை நீக்கி ஞானம் பிறக்கும். “144” ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாபுஷ்கரத்தில் நீராடும் வாய்ப்பு அனைவருக்குமே கிட்டாத ஒரு பேறு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் எதையும் சமாளிக்கும் தைரியம் தரும் நரசிம்மர் போற்றி

இது போன்ற பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have TThamirabarani pushkaram 2018 details in Tamil. Thamirabarani pushkaram 2018 places, location and other details are here. Thus is also called TThamirabarani maha pushkaram 2018

- Advertisement -