கடினமாக உழைப்பது பணத்தை சம்பாதிப்பதற்காக தான். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் பணத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை என்றால் நம்முடைய உழைப்பிற்கு எந்தவித பலனும் இல்லாமல் போய்விடும் அல்லவா? பணத்தை அதிக அளவில் சேர்ப்பதற்கு தன ஆகர்சனம் என்று கூறப்படுகிறது. இந்த தன ஆகர்ஷணம் ஏற்படுவதற்கு சில பொருட்கள் உதவி செய்யும். அந்த பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் ஜாதிக்காய். ஜாதிக்காயை வைத்து எந்த முறையில் நாம் பரிகாரம் செய்தால் நமக்கு தன ஆகர்ஷணம் ஏற்பட்டு பண வரவு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவை அதிகரிக்க
தன ஆகர்ஷண பொருட்கள் என்று பல பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் ஜாதிக்காய். பொதுவாக ஜாதிக்காயை குழந்தைகளுக்கு மருந்து ஊற்றும் போது பயன்படுத்துவார்கள். இந்த ஜாதிக்காயில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதேபோல் மகத்துவம் நிறைந்த பண்புகளும் இருக்கின்றன. இந்த மகத்துவம் நிறைந்த பண்புகளை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் நம் வாழ்க்கையில் தன ஆகர்ஷணம் ஏற்பட்டு பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.
ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணிக்குள் 9 பூச்சி இல்லாத நல்ல ஜாதிக்காயாக பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு மூட்டையாக கட்டி வீட்டின் நிலை வாசலில் கட்டி விட வேண்டும். இப்படி ஜாதிக்காயை நிலை வாசலில் கட்டுவதன் மூலம் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதனால் பண வரவும் ஏற்படும்.
இதே போல் மஞ்சள் நிற துணியில் 5 ஜாதிக்காயை வைத்து மூட்டையாக கட்டி பணம் நகை வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் பணமும் நகையும் அதிக அளவில் சேர ஆரம்பிக்கும். இதோடு மட்டுமல்லாமல் ஜாதிக்காய் எண்ணெய் என்று விற்கும். இந்த எண்ணையை பயன்படுத்தி நாம் தீபம் ஏற்றும் பொழுதும் நமக்கு தன ஆகர்ஷணம் ஏற்படும்.
குபேரருக்கு வியாழக்கிழமை தோறும் தீபம் ஏற்றும் பொழுது இலுப்பை எண்ணெயுடன் சிறிது ஜாதிக்காய் எண்ணெயும் கலந்து ஏற்றுவதன் மூலமும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றும் பொழுது அதனுடன் சிறிதளவு இந்த எண்ணையை கலந்து ஏற்றுவதன் மூலமும் குபேரர் மற்றும் மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளை பெற்று தன ஆகர்சனத்தை ஏற்படுத்த முடியும்.
வீட்டில் பண வரவை ஏற்படுத்தக்கூடிய நபராக கருதப்படும் குடும்பத் தலைவர் படுக்கும் இடத்தில் அவரின் தலைமாட்டிற்கு நேராக ஒரு சிறிய முருகனின் படத்தை வைத்து அவருக்கு முன்பாக 11 ஜாதிக்காய்களை ஒரு கவரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தலைவர் தூங்கி கண்விழிக்கும் பொழுது இந்த முருகரையும் அவருக்கு முன்பாக இருக்கக்கூடிய ஜாதிக்காயும் பார்த்த வண்ணம் எழ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் பணவரவு ஏற்படுவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைந்து பணத்தை அதிக அளவில் ஈட்ட ஆரம்பிப்பார்கள்.
இதையும் படிக்கலாமே: வேண்டிய வரத்தை தரும் முருகர் தீப வழிபாடு
ஜாதிக்காயை வைத்து இந்த முறையில் தாந்திரீகமான பரிகாரங்களை நாம் செய்வதன் மூலம் நமக்கு தன ஆகர்ஷணம் ஏற்படும். அதனால் பண வரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இதை மேற்கொண்டு நல்ல பலனை பெறலாம்.